சுற்றுலா வந்த வான் விபத்து: முதியவர் படுகாயம்
திருகோணமலை - உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிலாவெளி - அபயபுர பிரதான வீதியில் வானுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரொருவர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்து இன்று (14) பிற்பகல் 2.00மணியளவில் இடம்பெற்றுள்ளது.
நிலாவெளியில் இருந்து மார்பிள் பீச் செல்வதற்காகக் கண்டி-அலவத்துக்கொட பிரதேசத்திலிருந்து சுற்றுலா வந்த இளைஞர்கள் பயணித்துக் கொண்டிருந்த வான் ஒன்றுடன் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்தில் திருகோணமலை மூன்றாம் கட்டை, புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய நபரொருவரே காயமடைந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
இவ்விபத்து தொடர்பில் விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





மலிவான வட்டி விகிதத்தில் ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கும் இந்திய அரசு.., எந்தெந்த வங்கிகள் தெரியுமா? News Lankasri

சொகுசு கார் முதல் பல ஆயிரம் டொலர் சம்பளம் வரை! போப் பிரான்சிஸ் செய்த நெகிழ்ச்சி செயல்கள் News Lankasri

சவுதி அரேபியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 4000 பிச்சைக்காரர்கள்: கவலையில் பாகிஸ்தான்! News Lankasri
