பலாலி சர்வதேச விமான நிலையத்தில் சுற்றுலாத் தகவல் மையம் திறந்துவைப்பு
யாழ்ப்பாணம், பலாலி சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் வெளியேறும் பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்கான தகவல் தொடர்பு நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
இந்த தகவல் தொடர்பு நிலையம் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸால் நேற்று (25) திறந்துவைக்கப்பட்டது.
வடக்கு மாகாணத்தில் சுற்றுலாப் பயணிகள் இலகுவாக பயணிக்க கூடிய வரலாற்று சிறப்புமிக்க இடங்கள், வழிபாட்டு தளங்கள் உள்ளிட்ட விடயங்கள் அடங்கிய சுற்றுலா வழிகாட்டி கையேடுகளை தகவல் தொடர்பு நிலையத்தில் இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும்.

அத்துடன் வடக்கு மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும் கைவினைப் பொருட்களும் இங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. சுற்றுலாப் பயணிகளுக்கான தகவல் தொடர்பு நிலையத்தை திறந்து வைத்ததன் பின்னர், விமான நிலைய செயற்பாடுகளை ஆளுநர் அவர்கள் பார்வையிட்டதுடன், விமான பயணிகளுடனும் கலந்துரையாடினார்.
சுற்றுலாப் பயணிகளுக்கான தகவல் தொடர்பு நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், சுற்றுலாப் பணியகத்தின் தலைவர், விமான நிலைய அதிகாரிகள் என பலரும் கலந்துச் சிறப்பித்தனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |









எனது நகரத்திற்குள் அமெரிக்க அதிகாரிகளுக்கு அனுமதி இல்லை: கிண்டலுக்குள்ளான கனேடிய மேயர் News Lankasri
மில்லியன் வீரர்களுடன்... ஈரான் விடுத்த மிரட்டல்: மீண்டும் 10 நாள் அவகாசம் அறிவித்த ட்ரம்ப் News Lankasri
இதுவரை யூத் திரைப்படம் தமிழ்நாட்டிலும், உலகளவிலும் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam