திடீரென வலுவடைந்த ரூபாவின் பெறுமதியால் ஏற்பட்டுள்ள சிக்கல்!
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுவடைந்து வருவதால் தாம் சிரமத்திற்குள்ளாகியுள்ளதாக சுற்றுலா விடுதி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சுற்றுலா விடுதி உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் சுமித் உபேசிறி இதனைத் தெரிவித்துள்ளார்.
காலி - உனவடுன பிரதேசத்தில் நேற்று (13.03.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 9.6 வீதம் அதிகரித்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
மார்ச் மாதத்தின் முதல் 6 நாட்களில் மாத்திரம் சுமார் 25,000 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாகவும் இந்த எண்ணிக்கை முதல் 08 நாட்களுக்குள் 30,000 ஆக அதிகரித்துள்ளதாகவும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
இந்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 210,184 ஆக பதிவாகியுள்ளது.
அதற்கமைவாக ஜனவரியில் 102,545 சுற்றுலாப்பயணிகளும், பெப்ரவரியில் 107,639 சுற்றுலாப் பயணிகளும் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
இதேவேளை, கடந்த 2022ஆம் ஆண்டில் மொத்தமாக 719,978 சுற்றுலாப் பயணிகளே வருகை தந்திருந்தனர்.
இந்த ஆண்டு பெப்ரவரி மாதத்தை பரிசீலிக்கும் போது அதிக எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

சிலை அரசியல் : அறிவும் செயலும் 2 நாட்கள் முன்

எதிர்நீச்சல் விசாலாட்சி அம்மாவா இது? பாவாடை தாவணியில் சொக்க வைக்கும் அழகி.. வைரலாகும் புகைப்படம் Manithan

நேட்டோவில் இணைந்தால்.., இந்த இரு ஐரோப்பிய நாடுகள் எங்கள் இலக்காக மாறும்! ரஷ்யா கடும் எச்சரிக்கை News Lankasri

தங்கை திருமணத்தில் 8 கோடிக்கு வரதட்சணை வழங்கிய சகோதரர்கள்! சீர் வரிசையை பார்த்து வியந்த ஊர்மக்கள் News Lankasri
