அகதி என்ற வார்த்தையை மறைக்க 30 வருடம்! புலம்பெயர் தமிழர்களின் கண்ணீர் கதை
இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து சென்ற ஈழத்தமிழர்களுடன் “அகதி” என்ற வார்த்தையும் ஒட்டிக்கொண்டது.
முப்பது ஆண்டுகளாக அகதி முகாம்களில் வாழும் தமிழர்கள்… ஒரு நாட்டின் அடையாளமில்லாமல், ஒரு நிலத்தின் உரிமையில்லாமல், ஒரு வாழ்வின் முழுமையில்லாமல் அவர்கள் அனுபவிக்கும் துயரங்கள் அளவில்லாதவை.
“அகதி” என்ற வார்த்தை அவர்கள் மீது முத்திரையாக முத்தமிட்டது ஆனால் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை போராட்டங்களால் நிரம்பியுள்ளது.
இந்த 30 வருட காலப்பகுதியில் அவர்களின் கனவுகள் சிதறின, எதிர்பார்ப்புகள் வீணானது, பலர் தங்களது மூலநாட்டின் வாசலை நோக்கி நிற்கும் ஆசையில் காலங்கள் கடந்து விட்டனர்.
இன்று அவர்களின் கண்களில் உள்ள அழுகை, இதயத்தில் உள்ள கனல் எப்போது முடிவடையும்? அகதி என்ற ஒற்றைச் சொல் அவர்கள் பெயருக்கு முன் இனிமேல் சேரவேண்டாமென்று அவர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்தநிலையில் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் நடிகர் சசிகுமாரின் இயக்கத்தில் வெளியான டுவரிஸ்ட் பேமிலி திரைப்படம் ஈழத்தமிழ்களின் உணர்வுகளை எடுத்துக்காட்டியுள்ளது.
இந்த திரைப்படத்தை புழல் குமிண்டிபுண்டி ஏதிலி முகாமிலுள்ள இலங்கை தமிழர்கள் பார்வையிட்ட பின்னர் தங்கள் உணர்வுகளை கண்ணீர் மல்க ஐபிசி தமிழோடு பகிர்ந்துக்கொண்டுள்ளனர்.
இது வெறும் அகதி மக்களின் கதை அல்ல ,இது மனங்களின் அழுகை, உரிமையின் அழைப்பு, மனித உரிமையின் குரல்!
இது தொடர்பான முழுமையான விபரங்களை கீழுள்ள காணொளியில் காண்க....
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNELஇல் இணையுங்கள் JOIN NOW |

விவாகரத்துக்கு பின் மீண்டும் திரையில் ஒன்று சேரும் சமந்தா - நாக சைதன்யா.. காரணம் என்ன தெரியுமா Cineulagam

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan

இஸ்ரேல்- ஈரான் போருக்கு மத்தியில் பெரிய முடிவை எடுக்கும் வட கொரியா.., உலகிற்கு ஒரு எச்சரிக்கை News Lankasri
