ரொனால்டோவின் வருகையால் புகழ்பெறத் தொடங்கியிருக்கும் சுற்றுலாத் தலங்கள்
பிரேசில் (Brazil) நாட்டைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற கால்பந்தாட்ட நட்சத்திரம் ரொனால்டோவின் வருகை காரணமாக இலங்கையின் சுற்றுலாத் தலங்கள் உலகளவில் பேசுபொருளாக மாறியுள்ளன.
பிரேசில் கால்பந்தாட்ட நட்சத்திரமான ரொனால்டோ, இந்நாட்களில் சுற்றுலா நோக்குடன் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
ரொனால்டோவின் சமூக வலைத்தள கணக்குகள்
ரொனால்டோவின் இலங்கை வருகையின் போது ஶ்ரீலங்கன் விமான சேவையில் அவர் பயணம் செய்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் இலங்கையின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ரொனால்டோ பொழுது போக்கும் புகைப்படங்கள் தற்போது உலகளவில் பேசுபொருளாகத் தொடங்கியுள்ளன.
ரொனால்டோவின் சமூக வலைத்தள கணக்குகளில் பகிரப்படும் குறித்த புகைப்படங்கள் பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்களினால் மீள் பகிர்வு செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





கடும் நிதி நெருக்கடிக்கு நடுவில்.., யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற காய்கறி வியாபாரியின் மகள் News Lankasri

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam
