வெளிநாட்டிலிருந்து இலங்கை வருவோருக்காக புதிய நடைமுறை
கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கையில் பொருட்களை கொள்வனவு செய்யும் போது செலுத்திய வற் வரியை மீளப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் பெப்ரவரி 10 ஆம் திகதிக்கு முன்னர் அதற்கு ஏற்ற வகையிலான விசேட கொடுக்கல்-வாங்கல் இடம்(Counter) திறப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகத்தின் அரச வருவாய் பிரிவின் பணிப்பாளர் கே.கே.ஐ.எரந்த தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் இந்த கவுண்டர் நடத்தப்படுவதாகவும், இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வற் செலுத்தியதாக உரிய சட்டமூலங்களை சமர்ப்பித்ததன் பின்னர் குறித்த வற் தொகையில் 80 வீதம் சுற்றுலா பயணிகளுக்கு மீள வழங்கப்படும் எனவும் பணிப்பாளர் தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 22 மணி நேரம் முன்

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri
