13 நாட்களில் இலங்கை முழுவதும் குவிந்த சுற்றுலாப் பயணிகள் - அரசாங்கம் வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்
இலங்கைக்கு இந்த வருடம் வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1.5 மில்லியனைத் தாண்டியுள்ளது என சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது.
இதற்கமைய, ஜனவரி 1 முதல் செப்டம்பர் 6 வரை நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,567,007 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1.5 மில்லியன் பயணிகள் வருகை
இந்த ஆண்டு இதுவரை, இந்தியாவிலிருந்து அதிகபட்சமாக 395,377 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். மேலும், ஐக்கிய ராச்சியத்திலிருந்து 152,625 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 102,473 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 91,763 சுற்றுலாப் பயணிகளும் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், செப்டம்பர் 1 முதல் 6 வரை 31,885 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறையில் இருப்பவரின் வாக்குமூலத்தால் மகிந்த கைது செய்யப்படலாம்! அநுராதபுர பேரணி மேடையில் இருந்து வெளியான தகவல்