பிரேசிலுடனான சுற்றுலாத்துறை மேம்பாட்டு புரிந்துணர்வுக்கு இலங்கை முயற்சி
பிரேசில் நாட்டுடன் சுற்றுலாத்துறை மேம்பாடு தொடர்பான புரிந்துணர்வொன்றை ஏற்படுத்திக்கொள்ள இலங்கை முயற்சிகளை முன்னெடுத்துள்ளது.
பிரேசிலுக்கான இலங்கைத் தூதுவர் சுமித் தசநாயக்க இதற்கான முயற்சிகளை முன்னெடுத்துள்ளார்.
இது தொடர்பில் பிரேசிலின் வௌியுறவுத்துறை அமைச்சர் அண்மையில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இலங்கை வரும் பிரேசில் உல்லாசப்பயணிகள்
பிரேசில் நாட்டின் சுற்றுலாப் பயணிகள் ஆசியக் கண்டத்தின் அதிலும் குறிப்பாக தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பாரியளவில் சுற்றுலாக்களில் ஆர்வம் கொண்டுள்ளனர். அந்நாட்டு அரசாங்கமும் அதற்கான அனுசரணைகளை வழங்கி வருகின்றது.
இந்நிலையில் பிரேசில் நாட்டின் உல்லாசப் பயணிகளை இலங்கைக்கு வரவழைப்பது தொடர்பில் பிரேசிலுக்கான இலங்கைத் தூதுவர் சுமித் தசநாயக்க மேற்கொண்ட முயற்சிகளுக்கு அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இனிவரும் காலங்களில் பிரேசிலின் உல்லாசப் பயணிகள் இலங்கைக்கு சுற்றுலாக்களை மேற்கொள்வது தொடர்பில் ஊக்குவிக்கப்படுவார்கள் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

உக்ரைன் உடைந்து சின்னாபின்னமாகும்... இந்த இரண்டு நாடுகளும் உலகை ஆளும்: எச்சரிக்கும் வாழும் நோஸ்ட்ராடாமஸ் News Lankasri

எங்கள் நாட்டில் உன்னை பணக்காரர் ஆக விடமாட்டேன்: புலம்பெயர்ந்தோர் ஒருவர் ஜேர்மனியில் சந்தித்த அதிர்ச்சி News Lankasri
