நாட்டில் நிலவும் குழப்பத்தின் எதிரொலி! இலங்கைக்கான பயணத்தை ரத்து செய்யும் வெளிநாட்டவர்கள்
இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் பாரிய வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
நாட்டில் நிலவி வரும் குழப்ப நிலைமைகளினால் இவ்வாறு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாளாந்தம் இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 4000இல் இருந்து 2500ஆக குறைவடைந்துள்ளது.
இவ்வாறு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் ஏற்பட்ட வீழ்ச்சி டொலர் பிரச்சினைக்கும் பாதிப்பினை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்படுகின்றது.
ஏற்கனவே இலங்கைக்கு வருகை தர பயணச் சீட்டுக்களை முன்பதிவு செய்து கொண்ட பல சுற்றுலாப் பயணிகள் அவற்றை ரத்து செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் மட்டுமன்றி இந்தியர்களும் இவ்வாறு தங்களது இலங்கை பயணத்தை ரத்து செய்துள்ளனர்.
இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இவர்களின் வருகையினால் சுமார் 503 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானமாக கிடைக்கப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 6 நாட்கள் முன்
டிரம்பை நம்பி ஏமாந்த ஈரான் போராட்டக்காரர்கள்: அமெரிக்கா நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது ஏன்? News Lankasri
பிக் பாஸ் டைட்டில் ஜெயித்த திவ்யாவுக்கு ரூ.50 லட்சம் மட்டுமின்றி மேலும் ஒரு பெரிய பரிசு! என்ன பாருங்க Cineulagam
மீண்டும் சரவணனை பார்க்க போன மயில்.. அங்கு நடந்த சம்பவம்! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அடுத்த வார ப்ரோமோ Cineulagam