உயிரியல் பாடத்தில் மாவட்ட மட்டத்தில் முதல் மூன்று இடங்களைப் பெற்று வித்தியானந்த கல்லூரி சாதனை
உயிரியல் பாடத்தில் மாவட்ட மட்டத்தில் முதல் மூன்று இடங்களையும் மு வித்தியானந்த கல்லூரி பெற்றுக் கொண்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளையில் உள்ள வித்தியானந்த கல்லூரி அண்மையில் வெளியாகியிருந்த 2024 ஆம் ஆண்டிற்கான உயர்தர பரீட்சை பெறுபேறுகளில் உயிரியல் மற்றும் கணித பாடப் பிரிவுகளிலும் தொழில்நுட்ப பாடங்களிலும் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளது.
சிறந்த பெறுபேறுகள்
நர்திகா,மதுவிழி, அச்சயா ஆகியோர் முதல் மூன்று இடங்களையும் பெற்றுள்ள மாணவிகள் ஆகும்.
விக்னேஸ்வரன் நர்திகா (Vigneswaran Narthika) 2AB பெறுபேறுகளை பெற்று மாவட்டத்தின் முதல் நிலையை பெற்றுள்ளார்.அகில இலங்கை மட்டத்தில் 927 ஆவது இடத்தையும் Z புள்ளி 2.03 பெற்றுள்ளார்.
சிவபாதம் மதுவிழி (Sivapatham Mathuvizhi )3A பெறுபேறுகளை பெற்று மாவட்டத்தின் இரண்டாம் நிலையை பெற்றுள்ளதோடு கிருபாகரன் அச்சயா (Kirupakaran Achchaya) 2AB பெறுபேறுகளை பெற்று மாவட்டத்தின் மூன்றாம் நிலையை பெற்றுள்ளார்கள்.
ஜெகதீஸ்வரன் சயிந்தன் 2AB பெறுபேறுகளை பெற்று மாவட்டத்தின் ஐந்தாம் நிலையினையும் தெட்சிணாமூர்த்தி யதுர்சிகன் 2AB பெறுபேறுகளை பெற்று மாவட்டத்தின் ஆறாம் நிலையினையும் கந்தசாமி சயீபன் 2AB பெறுபேறுகளை பெற்று மாவட்டத்தின் ஒன்பதாம் நிலையினையும் பெற்றுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |