இந்திய இராணுவ ஹெலிகொப்டர் விபத்து- காரணம் கண்டறிய தொடரும் முயற்சிகள்
இந்திய தலைமை இராணுவத் தளபதி பலியான ஹெலிகொப்டர் விபத்து குறித்து 3-வது நாளாக இந்திய உயர் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி நஞ்சப்ப சத்திரத்தில் இராணுவ ஹெலிகாப்டர் மரங்கள் மீது மோதி தீப்பிடித்து எரிந்து விழுந்தது.
இந்த கோர விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட்ட 13 பேர் மரணம் அடைந்தனர்.
இந்தநிலையில் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், மீட்புப் பணிகளில் ஈடுபட்டவர்கள், பொதுமக்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்தி பதிவு செய்து வருகின்றனர்.
இதேவேளை சம்பவம் நடந்த பகுதியில் வெளியார் எவரையும் அனுமதி இன்றி உள்ளே நுழைய விடக்கூடாது.
அத்துடன் சம்பவ இடத்தில் விமானப்படை, ராணுவ அதிகாரிகள் விசாரணை நடத்த வந்து செல்வது குறித்தும், தற்போது நிலை குறித்தும் மாவட்ட நிர்வாகிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.