நாங்கள் ஒன்றாக இணைந்து, ஏதாவது செய்வோம்! - ரணிலுக்கு சொல்லப்பட்ட திட்டம்
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற பின்னர், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம அவரை முதலில் வரவேற்தாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன், அவருக்கு ஒரு திட்டத்தை முன்வைத்துள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தொலைபேசி ஊடாக சொல்லப்பட்ட திட்டம்
"நீங்கள் நாடாளுமன்ற உறுப்பினராக வந்திருப்பது நல்லது, நாங்கள் ஒன்றாக புதியதைச் செய்வோம்" என்று வெல்கம விக்ரமசிங்கவுக்கு பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பதவியேற்பு விழாவிற்கு ரணில் விக்ரமசிங்கத் தயாரானபோது, அமைச்சரும், சபைத் தலைவரும், பாடசாலை நண்பருமான தினேஷ் குணவர்தன அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
ஒரு கட்சித் தலைவரைத் தவிர அனைவரும் வாழ்த்து
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைத் தவிர அரசாங்கத்தில் உள்ள அனைத்து கட்சித் தலைவர்களும், எதிர்க்கட்சியும் விக்ரமசிங்கவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கையெழுத்திடப்படவில்லை
அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சகத்தியினர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தில் குமாரா வெல்கமா கையெழுத்திடவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.