இலங்கையின் இன்றைய வானியல் நிலவரம்
இலங்கையின் வானிலையில் வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் நிலவும் மழை, அடுத்த சில நாட்களில் தற்காலிகமாகக் குறையும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இந்தநிலையில் வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், நுவரெலியா மாவட்டத்திலும் இன்று அவ்வப்போது மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ.க்கு மேல் கனமான மழை வீழ்ச்சியை எதிர்பார்க்கலாம்.
கடல் பகுதிகளில் மன்னார் முதல் பொத்துவில் வரை திருகோணமலை, காங்கேசன்துறை வழியாகக் கடல் பகுதிகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
கொழும்பிலிருந்து திருகோணமலை வரை காங்கேசன்துறை வழியாகக் கடல் பகுதிகளில் காற்றின் வேகம் சில நேரங்களில் (50-60) கி.மீற்றர் வரை அதிகரிக்கும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?... கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri
