வடகிழக்கு பகுதியில் அதிகரிக்கும் காற்றின் வேகம்! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீட்டர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதேவேளை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
சீரான வானிலை
சப்ரகமுவ மாகாணத்தின் சில இடங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் நாட்டின் பிற பகுதிகளில் முக்கியமாக சீரான வானிலை நிலவும்.
இதேவேளை, சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே மக்கள் அவதானமாக செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 6 மணி நேரம் முன்
வெடித்து சிதறிய IRIS Dena கப்பல்! பலத்த பாதுகாப்புடன் சிறப்பு விமானத்தில் ஈரானுக்கு அனுப்பப்பட்ட சடலங்கள்
ஈரான் USS ஆபிரகாம் லிங்கனைத் தாக்கியதா..! குற்றச்சாட்டை மறுக்கும் அமெரிக்கா - அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் போர்களம்