இன்றும் வீழ்ச்சியை பதிவு செய்துள்ள அமெரிக்க டொலர்
கடந்த இரு தினங்களுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலரொன்றின் பெறுமதியில் இன்றைய தினமும் சிறு வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இதன்படி, இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலரொன்றின் விற்பனை பெறுமதி 367 ரூபா 07 சதமாக பதிவாகியுள்ளது.
அதேசமயம், டொலரொன்றின் கொள்முதல் பெறுமதி 355 ரூபா 81 சதமாக பதிவாகியுள்ளது.
யூரோ ஒன்றின் பெறுமதி

இலங்கை மத்திய வங்கியின் தகவலின் படி இன்றைய தினம் யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 387 ரூபா 98 சதமாக பதிவாகியுள்ளது.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 373 ரூபா 12 சதமாக பதிவாகியுள்ளது.
பவுண்ட் ஒன்றின் இன்றைய பெறுமதி

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, பிரித்தானிய பவுண்ட் ஒன்றின் விற்பனை பெறுமதி 449 ரூபா 63 சதமாக பதிவாகியுள்ளது.
அதேவேளை, பிரித்தானிய பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 432 ரூபா 56 சதமாக பதிவாகியுள்ளது.
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 4 மணி நேரம் முன்
பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri
சன் டிவியில் புனிதா, மணமகளே வா சீரியலை தொடர்ந்து முடிவுக்கு வரும் மற்றொரு சீரியல்... ரசிகர்கள் ஷாக் Cineulagam