தமிழர் தாயக அழிப்பு சட்டத்தின் விளைவே இன்றைய பொருளாதார நெருக்கடி

Sri Lankan Tamils Sri Lanka Economy of Sri Lanka
By Dias Jun 03, 2022 06:46 AM GMT
Report
Courtesy: தி.திபாகரன் M.A

"" எதிர்கொள்ள முடியாத பொருளாதார நெருக்கடியை  இலங்கை  சந்திக்கும்"" என பிரதமராக பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்க  குறிப்பிடுகிறார். இந்தப் பொருளாதார நெருக்கடியை எதிர் கொள்வது மிகக் கடினமானது என்பதுவும், இலங்கை அரசால் இந்த  நெருக்கடிக்கு முகம்கொடுக்க முடியாது போகலாம் என்ற செய்தியும் மறைந்துகிடக்கிறது. எனவே இத்தகைய பாரதூரமான பொருளாதார நெருக்கடிக்கான அடிப்படைக் காரணங்கள் என்ன என்பதை பற்றி நோக்குவது அவசியமானது.

""கடந்த 30 ஆண்டுகளாக தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையை செய்தோம் அதனுடைய விளைவினால் இப்போது துயரத்தை  அனுபவிக்கிறோம் "" என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அண்மையில் தனது ட்விட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அவருடைய கூற்று  உண்மையானதுதான்.

ஆனால் இந்த 30 ஆண்டுகால யுத்தம் ஆரம்பமானதற்கான அடிப்படை காரணம் என்ன என்பது பற்றி அவர் குறிப்பிடத் தவறிவிட்டார். தமிழ் மக்களை ஆயுதப் போராட்டத்துக்கு கொண்டு வந்து நிறுத்தியது வரண்ட வலய அபிவிருத்தி என்ற போர்வையில் கல்லோயாவில் ஆரம்பிக்கப்பட்டு இன்று மணலாறு வரை விரிந்து நிற்கும்  சிங்களக் குடியேற்றத் திட்டம்தான் என்பதையும் அவர் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடி என்பது ஏதோ சடுதியாக சில ஆண்டுகளில் ராஜபக்ச குடும்பத்தினரின் தவறான வழிநடத்தலினால், நிர்வாக சீர்கேட்டினால் ஏற்பட்டது என குறிப்பிடுவது  தவறானது. இலங்கையின் பொருளாதார நெருக்கடியானது இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து சிங்கள ஆட்சியாளர்கள்  கடைப்பிடித்த பொருளாதாரக் கொள்கைகளும் சேனநாயக்க ஆரம்பித்த  வரண்ட வலய அபிவிருத்தி என்ற போர்வையில் மேற்கொள்ளப்பட்ட சிங்களக் குடியேற்றத்  திட்டங்களும் ஆகும்.

தாயக நிலப்பகுதியை இழந்த தமிழர்கள்

தமிழர் தாயக அழிப்பு சட்டத்தின் விளைவே இன்றைய பொருளாதார நெருக்கடி | Today S Economic Crisis Is The Result Of The Tamil

வரண்டவலய குடியேற்றத் திட்டம் என்பது இலங்கை அரசின் முதுகில் ஏற்றப்பட்ட சுமையாகவே இருந்தது. ஆனால்  அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை குடியேற்றத் திட்ட பகுதி ஆளும் கட்சியின் தொகுதியாக மாறி சுகமான பதவி அரசியலுக்கும், அரசியல் கட்சி வளர்ச்சிக்கும்தான் உதவின. அதேநேரம் தமிழ் மக்களைப் பொறுத்தளவில் அவர்கள் தமது தாயகப் நிலப்பரப்பின் பகுதிகளை இழந்தனர், தாயக நிலப்பரப்பின் நில தொடர்ச்சி அறுக்கப்பட்டு துண்டாடப்பட்டது. தமிழ் மக்கள் தமது நிலத்தில் படுகொலை செய்யப்பட்டார்கள். சொத்துக்களையும் நிலங்களையும் இழந்தார்கள். அதனால் தாயகத்தை விட்டு ஒரு  தொகுதி ஈழத் தமிழர்கள் புலம்பெயர்ந்து மேற்கு நாடுகளுக்குச் சென்றார்கள். இதன்மூலம் சிங்கள தேசியவாதம் தமிழ் மக்களின் குடி தொகையை இலங்கைத்தீவில் குறைத்தது. நிலங்களை அபகரித்துக் கொண்டது .இதுவே சிங்கள பெரும் தேசியத்திற்குக் கிடைத்த  இலாபமாகும்.

பட்டிப்பளையாற்றுக்கு  "கல்லோயா'‘ என சிங்கள பெயர் மாற்றப்பட்டு சிங்களக் குடியேற்றத் திட்டமாக முன்னெடுக்கப்பட்டது.  உண்மையில் இந்த வரண்டவலய அபிவிருத்தி என்பது விவசாய உற்பத்தியை  அதிகரிக்கவில்லை. எமாறாக அது பெரும் பொருளாதாரச் செலவினத்தை ஏற்படுத்தியது. ஏற்கனவே தென்பகுதியில் குடியிருந்த மக்கள் கிழக்கு மாகாணத்துக்கு நகர்த்தப்பட்டு புதிதாக வீடுகளும், கட்டடங்களும், வீதிகளும், குளங்களும் உருவாக்கப்பட்டன.

ஆக புதிதாக அரசாங்க உத்தியோகத்தர்களையும் நியமித்தது.   ஆனால் இது இலங்கையின் பெரிய பொருளாதாரத்தை விழுங்கியது. பெரும் பொருட்செலவில் குடியமர்த்தப்பட்ட  குடியேற்ற வாசிகளுக்கு அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டன. பல பத்தாண்டுகளாக  இந்த குடியேற்றவாசிகளுக்கு மானிய அடிப்படையில் அனைத்து உற்பத்தி உள்ளீகளையும், உற்பத்தி சாதனங்களையும் வழங்கியதன் மூலம் தொடர்ந்து அந்த மக்களை சோம்பேறிகளாக்கி பெரும் பொருளாதாரச் செலவினத்தையே தொடர்ந்து ஏற்படுத்தியது. இலங்கை பொருளாதாரத்துக்கு இந்த குடியேற்றத்  திட்டங்கள் பங்களிப்பை  வழங்குவதற்குப் பதிலாக தமிழ்-சிங்கள முரண்பாட்டை மோதல் நிலைக்கு உயர்த்தி சென்றது.  

சிங்களக் குடியேற்றத்தைத் தொடர்ந்து தக்கவைப்பதற்கு குடியேற்ற வாசிகளுக்கு தொடர்ந்தும் பெரிய அளவிலான மானியங்கள் வழங்கப்பட்டன. அதே நேரத்தில் தமிழர் தாயகத்தில் நிகழ்ந்த விடுதலைப் போராட்டத்துக்கு எதிராக பெரும் இன அழிப்பு யுத்தம் ஒன்றை அரசு மேற்கொள்ளவே  பெரும் பொருளாதாரச்  செலவு ஏற்பட்டது.

குடியேற்ற திட்டத்திற்காக இலங்கை வாங்கிய கடன்

தமிழர் தாயக அழிப்பு சட்டத்தின் விளைவே இன்றைய பொருளாதார நெருக்கடி | Today S Economic Crisis Is The Result Of The Tamil

ஆரம்பத்தில் குடியேற்ற திட்டங்களுக்காக  கடன் பெற்று அதைத் தனது நிர்வாக இயந்திரத்திற்கு பெருமளவும் செலவழித்த இலங்கை அரசு இந்த குடியேற்ற திட்டங்களுக்கு எதிராக தமிழ் மக்கள் நடத்திய போராட்டத்திற்கு எதிராகவும் பெருந்தொகை கடனைப் பெற வேண்டி ஏற்பட்டது.  இலங்கை சுதந்திரமடைந்த போது இலங்கையின் மொத்த இராணுவத்தின் தொகை சில ஆயிரம் மட்டுமே ஆனால் 1971 ஆம் ஆண்டு ஜேவிபி கிளர்ச்சி ஏற்பட்டபோது கிளர்ச்சியை அடக்க பயன்படுத்த இராணுவத்தின் தொகை 6 ஆயிரமாக இருந்தது.

1983 கறுப்பு ஜூலை இனப்படுகொலை கலவரம் ஏற்பட்டபோது இலங்கை இராணுவத்தின் தொகை 12ஆயிரமாக இருந்தது.1985 ஆம் ஆண்டு 20 ஆயிரமாக அதிகரித்தது. 1987ஆம் ஆண்டு வடமராட்சியில் லிபரேசன் ஒப்ரேஷன் தாக்குதலை ஆரம்பிக்கும் போது இலங்கை இராணுவத்தின் தொகை 40 ஆயிரமாக இருந்தது. 1990 ஆம் ஆண்டு அது ஒரு லட்சமாக அதிகரித்து தற்போது 3 லட்சத்து 45 ஆயுதமாக உயர்ந்து நிற்கிறது.

இத்தகைய பாரிய இராணுவ கட்டுமானம்  இலங்கையின் பொருளாதாரத்தை விழுங்கிக் கொண்டிருக்கிறது. யுத்தம் முடிவடைந்து 13ஆண்டுகள் கடந்தும் இராணுவத்துக்கு ஒதுக்கப்படுகின்ற நிதி அதிகரித்து செல்கிறதே தவிர குறைந்து செல்லவில்லை . இதுவே இலங்கையின் இன்றைய பொருளாதார நெருக்கடியின் ஆணிவேராக உள்ளது.

பாரிய பங்களிப்பை வழங்கிய பெருந்தோட்டத்துறை

தமிழர் தாயக அழிப்பு சட்டத்தின் விளைவே இன்றைய பொருளாதார நெருக்கடி | Today S Economic Crisis Is The Result Of The Tamil

இலங்கையின் பொருளாதாரத்துக்கு பெரிய பங்களிப்பைச் செய்த பெருந்தோட்டத்துறை யுத்தத்தின் விலை அதிகரிப்பினாலும் ஏனைய பெருந்தோட்ட உற்பத்தி நாடுகளின் சந்தை போட்டினாலும் பெரும் சரிவைச் சந்தித்தது . இவை அனைத்தும் ஒட்டுமொத்த இலங்கை பொருளாதாரத்தை ஆட்டங்காணச் செய்தது.

இலங்கை தனது பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு தமிழின எதிர்ப்பு மற்றும் யுத்த அரசியல் பின்னணியில் உல்லாசப் பயணத்துறைகளை விருத்தி செய்யவும் அதனால் முடியாமல் போய்விட்டது.  நீண்ட காலமாக இத்தகைய பொருளாதார சரிவின் விளைவுகள் தொடர்ந்து இலங்கையை கடன் பெறவேண்டிய நிலைக்குத் தள்ளியது. கடனுக்கான வட்டியை மீள செலுத்த வேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலையை இனப்படுகொலை யுத்தம் இலங்கை அரசுக்குக் கொடுத்தது. கடனும் ,  வட்டியும் வட்டிக்கான கடனுமென சுற்றுவட்டம் இலங்கை பொருளாதாரத்தின் கழுத்தை நெரித்துக் கொண்டிருக்கிறது .

இந்த நேரத்தில் இந்த நெருப்பில் இருந்து விடுபடுவதற்காக ரணில் விக்கிரமசிங்க புதிய பிரதமராக ஒரு தேசிய அரசாங்கம் ஒன்றை உருவாக்கி பொருளாதாரத்தை கட்டுக்குள் கொண்டுவர உலக நாடுகளிடமும் ஐ.எம்.எப் போன்ற சர்வதேச நிறுவனங்களிடமும் கடன் பெறுவதற்கான பேரங்கள் பேசப்படுகின்றன. எனவே இந்த பேரங்களில் ஐ.எம்.எவ் உடைய நிபந்தனைகளுக்கு கட்டுப்பட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

அரச ஊழியர்களை குறைக்கத்திட்டம்

தமிழர் தாயக அழிப்பு சட்டத்தின் விளைவே இன்றைய பொருளாதார நெருக்கடி | Today S Economic Crisis Is The Result Of The Tamil

ஏற்கனவே இலங்கையில் இருக்கின்ற அரசு ஊழியர்களின் எண்ணிக்கை தேவைக்கு மிஞ்சி அதிகரித்திருக்கிறது. அரச ஊழியர்களின் ஆள்த் தொகையைக் குறைக்குமாறு ஐ.எம்.எப் அரசை வற்புறுத்துகிறது. அத்தோடு அரசாங்க கூட்டுத்தாபனங்களை தனியார் மயப்படுத்துவும் அது நிர்ப்பந்திக்கிறது. அதன் முதல்  கட்டம்தான் இலங்கை விமானப் போக்குவரத்து சேவை தனியார் வசம் செல்கின்றது.

இது தொடர்ந்து ஏனைய துறைகள் நோக்கியும் தாவும். இதன் மூலம்  தற்காலிகமாக  ஒன்று,  இரண்டு வருடங்களுக்கு இந்த பொருளியல் நெருக்கடியை சமாளிக்க முடியும். ஆனாலும் இந்தப் பொருளியல்  நடவடிக்கைகள்   புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க மாட்டாது.  ஆகவே அடுத்த சில வருடங்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகளை இளைஞர், யுவதிகள் பெற முடியாமல் போகும்.  அது இன்னொரு வகையான பெரும் நெருக்கடியை இலங்கைக்குக் கொடுக்கும். அந்த நெருக்கடியிலிருந்து இலங்கை மீள முயல்வது என்பது ஒருபோதும் இயலாது போய்விடும்.

இனப்படுகொலையால் வெளியேறிய புலம்பெயர் தமிழர்கள்

தமிழர் தாயக அழிப்பு சட்டத்தின் விளைவே இன்றைய பொருளாதார நெருக்கடி | Today S Economic Crisis Is The Result Of The Tamil

 எனவே இலங்கைத் தீவின் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இலகுவான வழிமுறைய இனப்படுகொலையால் வெளியேறிய ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட புலம்பெயர் தமிழர்கள் இலங்கையின் பொருளாதார நெருக்கடியை ஓரளவு தீர்க்கவல்ல  சக்தியாக வளர்ந்து இருக்கிறார்கள்  என்பதால் அவர்களின் உதவி பெறப்பட்டால் இந்தப் பிரச்சினை ஓரளவு  தீர்க்கப்படும் . ஆனால் புலம்பெயர் தமிழர்கள் உடைய முதலீடுகள் இலங்கைக்கு போகவேண்டுமாக இருந்தால் தமிழருடைய அரசியல் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் .

 ஈழத் தமிழர்களுக்கு நிரந்தரமான, நியாயமான   ஒரு தீர்வு முன்வைக்கப்பட்டு அது சரியாக நடைமுறைப் படுத்தப்பட்டால் மாத்திரமே புலம்பெயர் தமிழருடைய  உதவி இலங்கைக்கு கிடைக்கும். அவ்வாறு ஈழத்தமிழர் பிரச்சினையை தீர்ப்பதற்கு சிங்கள தேசம் எந்தளவு அளவில் தயாராக உள்ளது என்பது இங்கே கேள்வியாக உள்ளது.

ஈழத்தமிழருடைய தேசிய அபிலாசைகளை பூர்த்தி செய்வதற்கு ஏற்ற வகையான ஒரு தீர்வுத் திட்டம் முன்வைக்கபடுமானால் அது ஆகக் குறைந்தது திம்புப் கோட்பாட்டின் அடிப்படையில் ஆவது அமைய வேண்டும் என்பது இங்கே முன்நிபந்தனையாக உள்ளது. திம்புக் கோட்பாட்டின் அடிப்படையில் என்கின்ற போது  தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை என்ற இந்த மூன்று அம்ச கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. அதன் அடிப்படையில் ஒரு தீர்வுத் திட்டத்தை இலங்கை அரசு ஏற்றுக்கொள்ளுமாக இருந்தால் இலங்கை நெருக்கடியில் இருந்து விடுபடுவதற்கான வழி இலகுவாகிவிடும் இது சாத்தியமான வழியுங்கூட.

சிங்களக் குடியேற்றங்கள் மீளப்பெறும் நிலை

தமிழர் தாயக அழிப்பு சட்டத்தின் விளைவே இன்றைய பொருளாதார நெருக்கடி | Today S Economic Crisis Is The Result Of The Tamil

இதனை எவ்வாறு சாத்தியப்படுத்துவது? இதற்கு சிங்கள பேரினவாத ஆட்சியாளர்கள் முதலில் தயாராக வேண்டும்.  திம்புக் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டு அதன் அடிப்படையில் இது தமிழர்களுக்கான தீர்வை நடைமுறைப்படுத்த முனைந்தால் சிங்களக் குடியேற்றங்களை தமிழர் தாயகத்தில் இருந்து மீளப் பெற வேண்டிய  ஒரு நிலை சிங்கள அரசுக்கு உருவாகும்.

குடியேற்றப்பட்ட சிங்களக் குடியேற்ற வாசிகளை எவ்வாறு  மீளப் பெறுவது  என்பது ஒரு பெரிய பிரச்சனைக்குரியது  எனப் பலரும் பேசக் கூடும்.  ஆனால் இவ்வாறு குடியேற்றவாசிகள் திருப்பி அழைக்கப்பட்ட வரலாறு அல்லது வெளியேற்றப்பட்ட வரலாறு சட்டபூர்வமாக நடைபெற்றிருப்பதை தென்னாசிய வரலாற்றில் இரண்டு இடங்களை குறிப்பிடமுடியும்.

ஸ்ரீமா சாஸ்திரி ஒப்பந்தம்

தமிழர் தாயக அழிப்பு சட்டத்தின் விளைவே இன்றைய பொருளாதார நெருக்கடி | Today S Economic Crisis Is The Result Of The Tamil

1949 ஆம் ஆண்டு  இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்திய பாகிஸ்தானிய குடியுரிமைச் சட்டமும் அதன் தொடர்ச்சியான ஸ்ரீமா சாஸ்திரி ஒப்பந்தமும் அதனால் மலையகத்திலிருந்து நாலரை லட்சம் மலையக மக்கள் ஒரு நூற்றாண்டுக்குப் பின்னர் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்ட நிகழ்வு இலங்கையில் நடந்திருக்கிறது.

2) இந்தியாவின் அஸாம்  மாநிலத்தில் குடியேறிய மேற்கு வங்காளிகளை வெளியேற்ற வேண்டி அதற்கு எதிராக அசாம் மாணவர் இயக்கம் மேற்கொண்ட ஆயுதப் போராட்டமும் அதன் விளைவாக அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் அஸாம் கண  பரிஷத் அமைப்புடன் மேற்கொண்ட ஒப்பந்தமும் அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் 1960 ஆம் ஆண்டுக்கு பின்னர் அஸாமில் குடியேறிய மேற்கு வங்காளிகள் திருப்பி அனுப்பப்பட்ட வரலாற்றையும் இங்கே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

அதே நேரத்தில் உலக ஒழுங்குக்கு மாறாக குடியேற்றவாசிகள் வெளியேற்றப்பட்ட வரலாறும் உண்டு 1970களில் உகண்டாவில் இருந்து ஆசியர்கள்  இடியமீன் ஆட்சிக்காலத்தில் துரத்தி அடிக்கப்பட்டார்கள் . அவ்வாறு வியட்நாமில் குடியேறிய சீனர்களும் வியட்நாம் விடுதலைக்குப் பின்னர் படகுகளில் ஏற்றப்பட்டு கடலில் விடப்பட் விடப்பட்ட நிகழ்வும் வரலாற்றில் நிகழ்ந்திருக்கிறன. அண்மைய காலத்தில் பர்மாவின் ரோஹிங்கிய பகுதியில் குடியேறிய வங்காள தேசத்தவர்கள் வங்காளதேசத்துக்கு துரத்தியடிக்கப்பட்ட வரலாற்றையும் சில  வருடங்களுக்கு முன்னே இந்த உலகம் கண்டிருக்கிறது.  

கவனத்தில் கொள்ள வேண்டிய சிங்களக் குடியேற்றங்கள் அகற்றம்

தமிழர் தாயக அழிப்பு சட்டத்தின் விளைவே இன்றைய பொருளாதார நெருக்கடி | Today S Economic Crisis Is The Result Of The Tamil

எனவே உலக ஒழுங்கில் இலங்கையும் இந்தியாவும் செய்துகொண்ட குடியேற்றவாசிகளை அகற்றும்  நடைமுறையை முன்னுதாரணமாகக் கொண்டு தமிழர் தாயகத்தில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் அகற்றப்படுவது என்பது கடினமானதோ அல்லது முடியாத காரியமோ அல்ல.அவை நடைமுறைக்கு சாத்தியமானது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆகவே அன்றைய கல்லோயாவிலிருந்து இருந்தது கந்தா கந்தலாகி சேருவில என நகர்ந்து மகாவலி அபிவிருத்தி என்ற போர்வையில் வெலிஓயாவாக  விரிந்து  பயணித்தது பயணித்ததன்  எதிரொலி ஈழத்தமிழர் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டனர். அந்த ஆயுதப் போராட்டத்துக்கு எதிரான இனப்படுகொலை யுத்தம் என்பது வரண்டவலய குடியேற்றத்தின் எதிர்விளைவு அந்த எதிர்மறை விளைவையே இன்றைய பொருளியல்  நெருக்கடியாக இலங்கை மக்கள் எதிர்கொள்கின்றனர் என்பதுவே உண்மையாகும்.

கட்டுரையாளர் : தி.திபாகரன் M.A

7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கரவெட்டி, உடுப்பிட்டி, Trichy, British Indian Ocean Terr.

06 Aug, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா

14 Jul, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, திருநகர், Ermont, France

11 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், பரிஸ், France

09 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Noisy-le-Sec, France

25 Jun, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

13 Jul, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, ஸ்ருற்காற், Germany, Scarborough, Canada

10 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bünde, Germany, Selm, Germany

11 Jul, 2024
மரண அறிவித்தல்

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை வடக்கு

11 Jul, 2021
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி 2ம் வட்டாரம், Aulnay-sous-Bois, France

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பேர்ண், Switzerland

12 Jul, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, Toronto, Canada

07 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Toronto, Canada

06 Jul, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US