பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி
இலங்கை மத்திய வங்கியின் இன்றைய நாளுக்கான நாணய மாற்று விகித அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று சிறிதளவு அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 357 ரூபா 37 சதமாகவும், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 368 ரூபா 68 சதமாகவும் பதிவாகியுள்ளது.
இதேவேளை, மற்ற வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் பெறுமதியில் வீழ்ச்சி காணப்படுகின்றது.
பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 376.57 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 361.54 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 446.10 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 428.61 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
குவைத் தினார் மற்றும் கட்டார் ரியால்

குவைத் தினாரின் பெறுமதியானது 1176.53 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை கட்டார் ரியாலொன்றின் பெறுமதியானது 98.12 ரூபாவாக காணப்படுகிறது.
குணசேகரன் சதித்திட்டம், சக்தியிடம் ஜனனி சொன்ன வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது நாளைய ப்ரோமோ Cineulagam
சக்திக்கு வந்த அடுத்த பிரச்சனை, ஜனனிக்கு சவால்விடும் அன்புக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
உலகின் மிகப்பெரிய போர் கப்பலைக் களமிறக்கிய ட்ரம்ப்... எதிர்க்கத் தயாராகும் ஒரு குட்டி நாடு News Lankasri