நீதியே இல்லாத நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு: வெட்கமே இல்லையா என சுமந்திரன் கேள்வி
நீதியே இல்லாத நாட்டில் நீதி அமைச்சராக இருப்பதற்கு வெட்கமில்லையா என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவைப் பார்த்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (02.12.2023) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நீதி இல்லாத நாடு
மேலும் அவர் தெரிவிக்கையில், ஆப்கானிஸ்தான் நாட்டின் கப்பல் போக்குவரத்து அமைச்சரவைப் போன்றே எமது நாட்டின் நீதி அமைச்சர் உள்ளார் என நான் கூறுவது வழக்கம்.

இந்த முறையாவது அதனைச் சொல்லாமல் இருப்பதற்கு நினைத்தால் கடந்த சில நாட்கள் இந்த நாட்டில் இடம்பெற்றவைகளைப் பார்க்கும் போது நீதியே இல்லாத நாட்டில் ஒரு நீதி அமைச்சர் என்றே எனது பேச்சை ஆரம்பிக்க வேண்டியுள்ளது.
நீதி இல்லாத நாடு எனச் சொல்வதற்குப் பிரதான காரணம் நாட்டிலே வெவ்வேறு மக்களுக்கு வெவ்வேறு விதமாக சட்டங்கள் பிரயோகிக்கப்படுகின்றமை அப்பட்டமாகத் தெரிகின்றது.
இதனைச் சுட்டிக்காட்ட வேண்டிய தேவை இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
ரஷ்ய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இணையத்தில் கிடைத்த தோழி: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
சீரியல் நடிகர் வெற்றி வசந்த், வைஷு வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகத்தில் குடும்பம், பிரபலம் பதிவு Cineulagam