பெருந்தோட்ட சமூகம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று விவாதம்!
நாடாளுமன்றம் இன்று (10.08.2023) முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியுள்ளது.
முற்பகல் 10.30 மணி முதல் பிற்பகல் 5.30 வரை எதிர்க்கட்சியால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய பெருந்தோட்ட சமூகம் தற்போது எதிர்கொள்ளும் சமூக - பொருளாதாரப் பிரச்சினைகள் தொடர்பில் ஒத்திவைப்பு விவாதம் இடம்பெறவுள்ளது.
குறித்த விவாதம் தொடர்பில் மலையக மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. காணிஉரிமை பற்றி அதிகம் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேவேளை நாளை 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல் 10.30 மணி முதல் பிற்பகல் 5.00 வரை தனியார் உறுப்பினர் பிரேரணைகள் பிரேரிக்கப்படவுள்ளன.
தனியார் பிரேரணைகள்
அதற்கமைய, உள்ளூராட்சி நிறுவங்களால் கழிவகற்றப்படுத்தல் (சமிந்த விஜேசிறி), மன்னன் இராவணன் தொடர்பாக முறைசார்ந்த ஆய்வொன்றை மேற்கொள்ளல் (புத்திக பத்திரண), நுண்நிதி நிறுவனங்கள் மற்றும் குத்தகை கடன் வழங்கும் நிறுவனங்களை கடுமையான ஒழுங்குமுறைப்படுத்தலுக்கு உட்படுத்துதல் (திருமதி கோகிலா குணவர்தன), பாடசாலை அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக பின்பற்ற வேண்டிய முறையியலை உள்ளடக்கிய சுற்றறிக்கையொன்றை வெளியிடல் (சட்டத்தரணி சாகர காரியவசம்), இலங்கையில் ஆசிரியர்களுக்கு ஐந்தாண்டுகளுக்கு ஒரு தடவை இடமாற்றம் வழங்கப்படுதல் ((பேராசிரியர் ரஞ்சித் பண்டார) மற்றும் வெளிநாட்டில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நலனோம்புகை வசதிகளை வழங்குதல் ( சமிந்த விஜேசிறி) ஆகிய தனியார் உறுப்பினர் பிரேரணைகள் அன்றைய தினம் பிரேரிக்கப்படவுள்ளன.
அதையடுத்து, பிற்பகல் 5.00 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை சபை ஒத்திவைப்பு வேளையின் போதான கேள்விகளுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

சாட்ஜிபிடி உதவியால் 46 நாட்களில் 11 கிலோ எடை குறைத்த நபர் - என்ன உணவுகள் எடுத்து கொண்டார்? News Lankasri
