ரோஹன விஜேவீர கொல்லப்பட்டு இன்றுடன் 33 ஆண்டுகள்
மக்கள் விடுதலை முன்னணியின் ஸ்தாபக தலைவர் ரோஹன விஜேவீர உட்பட அந்த கட்சியினர் மேற்கொண்ட இரண்டாவது புரட்சியின் போது கொல்லப்பட்ட கட்சியின் செயற்பாட்டளார்களை நினைவுகூரும் கார்த்திகை வீரர்கள் தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.
1989 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் திகதி ரோஹன விஜேவீர கொலை செய்யப்பட்டு இன்றுடன் 33 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
அன்றைய ஐக்கிய தேசியக்கட்சியின் அரசாங்கத்தின் கீழ் பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்ட ரோஹன விஜேவீர கொழும்பு பொரள்ளையில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
கார்த்திகை வீரர்கள் தினம்

மக்கள் விடுதலை முன்னணி ஒழுங்கு செய்துள்ள கார்த்திகை வீரர்கள் தினம் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு கொழும்பு விகாரமஹாதேவி வெளியரங்கில் நடைபெறவுள்ளது. அங்கு நினைவு தின இசை நிகழ்ச்சி ஒன்று நடைபெறவுள்ளது.
அதேவேளை முன்னிலை சோசலிசக்கட்சியின் ஒழுங்கு செய்துள்ள கார்த்திகை வீரர்கள் தினம் இன்று பிற்பகல் 3 மணிக்கு கேகாலை நகர சபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
மாவீரர் வாரம்

இதனிடையே மக்கள் விடுதலை முன்னணி மற்றும் முன்னிலை சோசலிசக்கட்சியினர் நடத்துவதை போன்று விடுதலைப் புலிகளின் மாவீரர்கள் தினத்தை நடத்த அனுமதியும் அங்கீகாரமும் வழங்கப்பட வேண்டும் என சமூக செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை மாவீரர் வாரம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. இலங்கையின் வடக்கு, கிழக்கில் நடைபெற்ற தமிழ் தேசிய தாயக உரிமை போராட்டத்தில் ஆயிரக்கணக்கான பேராாளிகளும் மக்களும் கொல்லப்பட்டனர்.
இறுதியாக கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்காலில் பல ஆயிரக்கணக்கான மக்களின் உயிர் தியாகங்களுடன் அந்த போராட்டம் மௌனிக்கப்பட்டது.

அதேபோல் தெற்கில் நடைபெற்ற முதலாளித்துவ வர்க்கத்திற்கு எதிரான போராட்டத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள்,யுவதிகள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செவ்வாய் மீது சனியின் மூன்றாம் பார்வை... அதிர்ஷ்டத்தினை அள்ளிச் செல்லும் ராசியினர் யார்னு தெரியுமா? Manithan