திருகோணமலையில் கைது செய்யப்பட்ட நபருக்கு நீதிமன்றம் கொடுத்த உத்தரவு!
திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில்
காணியொன்றுக்கு போலியான ஆவணங்களை சரிசெய்து விற்பனை செய்த
சந்தேக நபர் ஒருவரை இம்மாதம் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு
திருகோணமலை நீதிமன்ற நீதிவான் இன்று(12) உத்தரவிட்டார்.
திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேக நபர் திருகோணமலை பகுதியில் உள்ள காணியொன்றுக்கு போலியான முறையில் காணி உறுதிப்பத்திரங்களை தயார் செய்து விற்பனை செய்துள்ளதாகவும், அந்த காணியின் உரிமையாளர் வெளிநாடு ஒன்றில் வசித்து வருவதாகவும் தெரியவருகின்றது.
குறித்த சந்தேக நபர் வெளிநாடு அனுப்புவதாக கூறி பணம் பெற்றுள்ளதாகவும் விசாரணைகள் மூலம் தெரிய வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமையவே தாம் அவரை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சந்தேக நபரை இன்று பொலிஸார் திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய
போதே தொடர்ந்தும் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 21 Evening
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து புலம்பெயர்ந்தோரை வெளியேற்ற ஒப்பந்தமிடும் ஐந்து ஐரோப்பிய நாடுகள் News Lankasri