இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! ஒருவர் பலி - 40 பேர் வைத்தியசாலையில்
மாவனெல்லை-உதுவன்கந்தை பிரதேசத்தில் இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 40 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்து இன்று (25) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் படுகாயமடைந்த பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்துள்ளார்.
கேகாலை மொலகொட பிரதேசத்தைச் சேர்ந்த 67 வயதுடைய ஓய்வுபெற்ற ஆசிரியை ஒருவரே விபத்தில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலர் வைத்தியசாலையில் அனுமதி
காயமடைந்தவர்கள் மாவனெல்ல, கேகாலை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்துக்கான காரணம்
மாவனல்லையில் இருந்து கேகாலை நோக்கிப் பயணித்த இ.போ.ச பேருந்து ஒன்றும் கேகாலையில் இருந்து கண்டி நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தொன்றும் பயணிகளை ஏற்றிக்கொள்வதற்காக நிறுத்தப்பட்டிருந்த மற்றுமொரு பேருந்தை கடக்க முற்பட்ட போது மோதியதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
விபத்து தொடர்பில் இரண்டு பேருந்துகளின் சாரதிகளும் மாவனல்லை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 23 மணி நேரம் முன்

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri

விஜய் திரைப்பட வியாபாரங்களில் இதுதான் Highest.. பல கோடிக்கு விற்பனை ஆன ஜனநாயகன் தமிழக உரிமை Cineulagam

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam
