மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் யாசகரொருவர் பலி
கல்முனை - மட்டக்களப்பு சாலையில் ஆரையம்பதி பகுதியில் நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கிச் சென்ற லொரி, பாதசாரி மீது மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
விபத்தில் காயமடைந்த பாதசாரி, சிகிச்சைக்காக மட்டக்களப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இறந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை, மேலும் அவர் அந்தப் பகுதியில் ஒரு யாசகர் என்பது தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக லொரியின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டு, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.