இலங்கையில் இன்றைய தினம் பதிவாகிய கோவிட் தொற்றாளர்களின் நிலவரம்
இலங்கையில் இன்று மேலும் 2 ஆயிரத்து 780 கோவிட் 19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த எண்ணிக்கையுடன் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையானது ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 123 பேராக அதிகரித்துள்ளது.
புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள தொற்றாளர்கள் திவுலப்பிட்டிய, பேலியகொடை, சிறைச்சாலை ஆகிய கொத்தணிகளுக்கு உரியவர்கள் என சுகாதார ஊக்குவிப்பு பணியகம் தெரிவித்துள்ளார்.
கோவிட் தொற்றாளர்களில் 28 ஆயிரத்து 976 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் ஆயிரத்து165 தொற்றாளர்கள் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இலங்கையில் மொத்தமாக ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 532 கோவிட் தொற்றாளர்கள் குணமடைந்துள்ளனர்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri
