இலங்கையை சர்வதேசத்தின் கால்பந்தாக மாற்றுவதற்கு எதிராக வீரவங்ச உட்பட நாங்கள் இணைந்துள்ளோம்! - தயாசிறி
இலங்கையை சர்வதேசத்தின் கால்பந்தாக மாற்றும் நடவடிக்கைகளுக்கு எதிராகவே விமல் வீரவங்ச உட்பட அனைவரும் இணைந்து செயற்படுவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் ராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
குருணாகலில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், நாங்கள் நேர்மையாக அரசாங்கத்தை பாதுகாப்பது போல், கூறும் அனைத்துக்கும் கைகளை தூக்கும் அளவுக்கு முதுகெலும்பில்லாதவர்களாக மாற நாங்கள் தயாரில்லை.
எமக்கென்று ஒரு நிலைப்பாடு உள்ளது. அதற்கு அமையவே செயற்படுவோம். எம் நாட்டை சர்வதேசத்தின் கால்பந்தாக மாற்ற முயற்சிக்கும் சக்திகளுக்கு எதிராகவே வீரவங்ச உட்பட கட்சிகளாகிய நாங்கள் அனைவரும் இணைந்து செயற்படுவோம்.
வேறு காரணங்களுக்காக அல்ல எனவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.
கடும் நஷ்டத்தை நோக்கி ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam
அவுஸ்திரேலியாவை விட்டு சிங்கப்பூருக்கு இடம்பெயர்ந்த தொழிலதிபர்: அவர் வைத்த குற்றச்சாட்டு News Lankasri