பொலிஸாரின் கோவிட் வைரஸ் தொடர்பான செயற்பாடுகளை முகநூலில் விமர்சித்தவருக்கு விளக்கமறியல்
ஏறாவூர் பொலிஸாரின் கோவிட் வைரஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பான விடயங்களை முகநூலில் மோசமாக விமர்சித்தார் என்ற குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டு நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டபோது அவரை மார்ச் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டு நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டபோது அவரை மார்ச் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில் சந்தேகநபர் குறித்த நடவடிக்கையை முகநூல் மூலம் மிக மோசமாக விமர்சித்து கோவிட் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்குக் குந்தகம் விளைவித்தார் என்பதே சந்தேக நபர் மீதான குற்றச்சாட்டாகும்.

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan