அமெரிக்காவினாலும் செப்டம்பர் 11 தாக்குதலை தடுக்க முடியாமல் போனது! - மைத்திரி தெரிவிப்பு
இரண்டு வாரங்களுக்கு முன்னரே செப்டம்பர் தாக்குதல் குறித்த ரகசிய தகவல் கிடைத்த போதிலும் அமெரிக்காவினால் தாக்குதலை தடுக்க முடியாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.
பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதம் ஆகியவை இலங்கை மட்டுமல்ல, முழு உலகமும் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தார்.
"உலகின் மிக சக்திவாய்ந்த நாடு அதன் பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் மற்றும் ஆயிரக்கணக்கான உயிர்கள் காவுகொள்ளப்பட்டமையை தடுக்க முடியவில்லை" என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி கலந்துகொண்டிருந்த இந்த நிகழ்வில் ஞானசார தேரரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam
