குறைந்தபட்சம் இரு வாரங்களுக்கு நாட்டை முடக்க வேண்டும் - வைத்திய நிபுணர் சுதர்சனி
குறைந்தபட்சம் இரண்டு வாரங்களுக்கு நாட்டை முடக்க வேண்டுமென கோவிட் கட்டுப்பாடு குறித்த இராஜாங்க அமைச்சரும், நிபுணத்துவ மருத்துவருமான வைத்தியர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் கொழும்பு ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
நேற்றைய தினமும் 3500க்கும் மேற்பட்ட கோவிட் தொற்றுறுதியாளர்கள் பதிவாகியுள்ளனர். இவ்வாறு சமூகத்திற்குள் நோய்த் தொற்றைப் பரப்பக்கூடியவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம்.
ஓர் நிபுணத்துவ மருத்துவர் என்ற அடிப்படையில் குறைந்தபட்சம் இரண்டு வாரங்களுக்கு நாட்டு மக்களை வீடுகளிலேயே முடங்கியிருக்கச் செய்ய வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.
புதிய கோவிட் திரிபு காரணமாக நாட்டில் கோவிட் மரணங்களின் எண்ணிக்கை உயர்வடைந்து செல்கிறது. நாட்டில் ஒட்சிசனின் தேவை அதிகரித்துள்ளதாகவும் ஏனைய நோய்களுடையவர்களுக்கு கோவிட் தொற்றினால் அதிக பாதிப்பு ஏற்படுகிறது.
தொற்று நோய் பற்றிய உண்மைத் தகவல்களை வெளிப்படுத்தாது விட்டால் நாமும் அழிந்து போக நேரிடும்.
நோய்த் தொற்று நிலைமைகள் குறித்து செய்தி அறிக்கையிடும் போது ஊடகங்களும் பொறுப்புணர்ச்சியுடன் செயற்பட வேண்டியது அவசியமானது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri
