எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டும்! - அமைச்சர் விடுத்துள்ள கோரிக்கை
நாட்டிள் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மத்தியில் எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டும் என கைத்தொழில் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கைத்தொழில் அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
கச்சா எண்ணெய் விலை வேகமாக அதிகரித்து வருவதால், இந்த ஆண்டு கடினமான ஆண்டாக இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது டீசல் லீற்றர் ஒன்றின் நட்டம் 88 ரூபாவாக உள்ளதாகவும் எனவே டீசல் மற்றும் பெட்ரோல் விலையை அதிகரிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மக்கள் தாம் பெறும் வருமானத்திற்கு ஏற்ப விலைவாசி உயர்வை எவ்வாறு நிர்வகிப்பது என்பதை அறிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





கடும் நிதி நெருக்கடிக்கு நடுவில்.., யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற காய்கறி வியாபாரியின் மகள் News Lankasri

நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள்: 300 அடி கீழ் நோக்கி பாய்ந்த விமானம்! திக் திக் நொடிகள்! News Lankasri
