தமிழக கடற்றொழிலாளர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்
இலங்கையில் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக கடற்றொழிலாளர்கள் மற்றும் அவர்களது படகுகளை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இரண்டு வெவ்வேறு நிகழ்வுகளில் 27 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு, நான்கு மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் தமது கடிதத்தில் அவர் கடும் விமர்சனத்தை வெளியிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சம்பவங்கள்
இந்த நிலையில் இந்திய கடற்றொழிலாளர்கள் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்ட சம்பவங்கள், கடற்றொழில் சமூகங்களின் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.
எனவே இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கடற்றொழிலாளர்களை பாதுகாக்க இலங்கை அரசாங்கத்துடன் உடனடியாக இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam
