அரசாங்கத்தின் துஷ்ட நோக்கத்தை தோற்கடிக்க வேண்டும்-டலஸ் அழகப்பெரும
உள்ளூராட்சி சபைத் தேர்தல் முறை மாற்றம் சம்பந்தமாக ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு தேர்தல் வரைப்படத்தை சுருட்டும் முயற்சியின் சமிக்ஞை என நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
கம்புறுப்பிட்டிய பிரதேசத்தில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஜனாதிபதியின் கருத்து அச்சமூட்ட கூடியது

உள்ளூராட்சி சபைத் தேர்தல் முறையை மாற்றுவது சம்பந்தமாக ஜனாதிபதி வெளியிட்டுள்ள கருத்து அச்சமூட்டக் கூடியது. உள்ளூராட்சி சபைத் தேர்தல் முறை தொடர்பாக திடீரென ஜனாதிபதி வெளியிட்டுள்ள இந்த கருத்து தேர்தலை ஒத்திவைக்கும் தந்திரமாக இருக்கலாம்.
இந்த விடயம் தொடர்பாக அரசாங்கத்டன் எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்த போவதில்லை என தேர்தலை ஆணைக்குழுவின் தலைவர் என்னிடம் கூறினார். அவரும் இந்த செய்தியை பத்திரிகையில் பார்த்தே அறிந்துக்கொண்டுள்ளார்.
அரசாங்கத்தின் இந்த முயற்சியை கட்சி பேதமின்றி தோற்கடிக்க இணைய வேண்டும்

இதில் இருக்கும் பாரதூரமான நிலைமை இதுதான். உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த தேவையான அடிப்படை நடவடிக்கைகளை தேர்தலை ஆணைக்குழு மேற்கொண்டு வரும் சந்தர்ப்பத்தில் இப்படியான கருத்துக்களை வெளியிடுவது நேர்மையா தேவையின் அடிப்படையில் அல்ல.
அரசாங்கத்தின் இந்த துஷ்ட நோக்கத்தை தோற்கடிக்க அனைவரும் கட்சி, நிற பேதங்களில் இன்றி ஒன்றிணையுமாறு அழைக்கின்றேன் எனவும் டலஸ் அழகப்பெரும மேலும் தெரிவித்துள்ளார்.
ஜெயிலர் 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா.. விஜய்யை தொடர்ந்து ரஜினி செய்யப்போகும் பிரம்மாண்ட விஷயம் Cineulagam