பணத்திற்காக ஒரு நாட்டை பகைத்துக்கொள்வதா என்பதை தீர்மானிக்க வேண்டும்
6.5 மில்லியன் டொலர்களுக்காக ஒரு நாட்டை பகைத்துக்கொள்வதா அல்லது அது சம்பந்தமான பிரச்சினையை சமாதானமாக தீர்த்துக்கொள்வதா என்பதை தீர்மானிக்க வேண்டும் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ (Johnston Fernando) தெரிவித்துள்ளார்.
குருணாகலில் இன்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர், சீனாவின் பசளை நிறுவனத்திற்கு பணத்தை செலுத்துவதில் எந்த தவறையும் தான் காணவில்லை எனவும் கூறியுள்ளார்.
மக்களின் பணம் செலவிடப்படுவதை விட, உடன்படிக்கை ஒன்று சம்பந்தமான பிரச்சினை இதில் ஏற்பட்டுள்ளது. அமைச்சரவை இந்த பணத்தை செலுத்த வேண்டும் என்று தீர்மானித்துள்ளது. நாடுகளுடன் பணியாற்றும் போது மிக கவனமாக செயற்பட வேண்டும்.
இந்த செயற்பாடுகளில் ஏதேனும் தவறுகள் நடந்திருந்தால், அது குறித்து கண்டறிய வேண்டும். எனினும் அதற்கு முன்னர் இரண்டு நாடுகளுக்கு ஏற்படப் போகும் நெருக்கடிக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும்.
உடன்படிக்கையை ஏற்படுத்திக்கொண்ட பின்னர் தவறு ஏற்பட்டாலும் அந்த பணத்தை செலுத்தியாக வேண்டும். 6.5 மில்லியன் டொலர் பணத்திற்கான ஒரு நாட்டை பகைத்துக்கொள்வதா அல்லது அமைதியாக பிரச்சினைக்கு தீர்வு காண்பதா என்பது குறித்து தீர்மானிக்க வேண்டும் எனவும் அமைச்சர் ஜோன்ஸ்டன் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை நாடு முழுவதும் இடம்பெறும் எரிவாயு வெடிப்புகள் சம்பந்தமாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வி பதிலளித்துள்ள அமைச்சர்,
இப்படியான சம்பவங்களுக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும். எரிவாயு நிறுவனம் ஒன்றின் தலைவர் தொலைபேசி அழைப்புக்கு கூட பதிலளிப்பதில்லை.
பொறுப்புகளை ஏற்றுக்கொண்டவர்கள., அதன் பொறுப்பை சரியாக நிறைவேற்ற வேண்டும். அப்படியில்லை என்றால், பதவி விலக வேண்டும்.
எவ்வாறாயினும் இந்த பிரச்சினையை துரிதமாக தீர்க்க வேண்டும். எதிர்வரும் நத்தார் மற்றும் புத்தாண்டு பண்டிகை காலத்தில் நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டால், அதற்கான முழுப் பொறுப்பையும் நிறுவனங்களே ஏற்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
ஸ்பெயினில் இருந்து மொராக்கோவிற்கு திரும்பிய 37,500 அகதிகள்: பலி எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு News Lankasri