தொடர்ந்து இராணுவ ஆக்கிரமிப்பிற்கு உள்ளாக்கப்படும் தமிழர்கள்! - சிறீதரன்
தமிழர்கள் தொடர்ந்து இராணுவ ஆக்கிரமிப்பிற்கு உள்ளாக்கப்படுகின்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
சிங்கள அரசால் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் என்று கூறும் பன்னாட்டு சமூகம் தமிழர்கள் இன்னமும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பினை எதிர்கொள்கிறார்கள் என குறிப்பிடப்படாமை தொடர்பிலும் கவலை வெளியிட்டுள்ளார்.
பெப்ரவரி 22ஆம் திகதி தொடங்கிய ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடர் மார்ச் 23ஆம் திகதி வரை இடம்பெற இருக்கின்றது.
இம்முறையும் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் பன்னாட்டுத் தளங்களில் தமிழர் இயக்கத்துடன் இணைந்து செயல்படும் ஐ.நாவின் அங்கீகாரம் பெற்ற அமைப்புகளின் (ECOSOC) ஊடாக இக்கூட்டத் தொடரில் கலந்து கொள்ளும் தமிழர் உரிமைச் செயற்பாட்டாளர்கள் கோவிட் - 19 வைரஸ் தொற்று காரணமாக இணையவழி ஊடாக கூட்டத் தொடரில் இணைந்து கொண்டு கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், சிங்கள அரசால் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர் என்று ஐ.நாவின் மனித உரிமைப் பேரவையின் உயர் ஆணையாளரும், 10 சிறப்பு பொறிமுறை அதிகாரமுள்ளவர்களும் தங்களது அறிக்கையில் சுட்டிக்காட்டியதற்கு நன்றி தெரிவிக்கிறோம்.
ஆனால் அவர்கள், தமிழர்கள் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்று கூறுவதற்கு மறந்துவிட்டனர். இலங்கையில் உள்ள வடக்கு, கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் இன அழிப்பு செய்யப்பட்டு 12 ஆண்டுகள் முடிந்து இன்னும் காலநீடிப்பு தர இந்தப் பேரவை விரும்புகிறது.
தமிழர்கள் தொடர்ந்து இராணுவ ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இராணுவ அடக்குமுறைக்கு கீழ் தங்களது பண்பாட்டு, சமூக, பொருளாதார, அரசியல், குடிமை உரிமைகளுக்காக போராடி கொண்டிருக்கின்றனர்.
கீழ்காணும் பரிந்துரைகளை வைத்து இலங்கை மீது தீர்மானம் கொண்டு வரும் முக்கிய குழுவும் மனித உரிமை உறுப்பினர்களும் உறுதியான தீர்மானத்தை கொண்டுவர கேட்டுக் கொள்கிறேன்.
இலங்கையை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும். சுதந்திரமான பன்னாட்டு விசாரணை பொறிமுறை நடத்த வேண்டும்.
இலங்கைக்கான சிறப்பு ஆய்வாளரை நியமிக்க வேண்டும். தமிழர்களின் தன்நிர்ணய உரிமையையும், அவர்களின் எதிர்பார்ப்புகளையும் அறிந்து உறுதி செய்ய ஐ.நாவின் மேற்பார்வையில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்

15 நாட்களாக நிறுத்தப்பட்டிருக்கும் F-35B பிரித்தானிய போர் விமானம்: அகற்றப்பட்ட தரவுகள் News Lankasri

பங்கர் பஸ்டராக உருவெடுக்கும் இந்தியாவின் அக்னி ஏவுகணை - சீனா, பாகிஸ்தானுக்கு கடும் அச்சுறுத்தல் News Lankasri
