தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமிழக முதலமைச்சரிடம் தெரிவித்துள்ள விடயத்தின் உள்நோக்கம்! ஈ.பி.டி.பி. வலியுறுத்தியுள்ள விடயம்

Eelam People's Democratic Party Sri Lanka Fisherman Tamil
By Kajinthan Dec 20, 2025 02:21 PM GMT
Report

தனி நாடே இறுதி இலக்கு என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமிழக முதலமைச்சரிடம் தெரிவித்திருப்பதன் உள்நோக்கத்தினை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்று ஈ.பி.டி.பி. வலியுறுத்தியுள்ளது.

மேலும், இந்தியக் கடற்றொழிலாளர் விவகாரத்தில் உண்மைகளை எடுத்துரைத்து எமது கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் அவலங்களுக்கு தீர்வு காண முயலாமல், உண்மைக்கு புறம்பான கருத்துக்களை வெளியிட்டமைக்கு கண்டனமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். ஊடக மையத்தில் இன்று (20.12.2025) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் மேற்குறித்த விடயங்ளை தெரிவித்தார்.

மத தலங்களுக்கு பலத்த பாதுகாப்பு! கண்காணிப்பில் ஆயிரக்கணக்கான புலனாய்வு அதிகாரிகள்

மத தலங்களுக்கு பலத்த பாதுகாப்பு! கண்காணிப்பில் ஆயிரக்கணக்கான புலனாய்வு அதிகாரிகள்

வாழ்வாதார பிரச்சினை

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், "ஈழத் தமிழர்களின் பிரதிநிதிகள் என்று அடையாளப்படுத்தி ஒரு தரப்பு இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டு தமிழக முதல்வரையும் சந்தித்திருக்கின்றது.

தற்போதைய பிராந்திய அரசியல் சூழலில் இவர்கள் கேட்டுக் கொண்டது போல தமிழக அரசியல் தரப்புக்களினால் மத்திய அரசிற்கு அழுத்தத்தினை கொடுக்க முடியுமா.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமிழக முதலமைச்சரிடம் தெரிவித்துள்ள விடயத்தின் உள்நோக்கம்! ஈ.பி.டி.பி. வலியுறுத்தியுள்ள விடயம் | Tnpf Meets Tamilnadu Chief Minister Epdp

தற்போதைய பூகோள அரசியல் சூழலில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை சார்ந்த விடயங்களில் மாற்றத்தினை ஏற்படுத்த முடியுமா என்பதெல்லாம் மிகவும் ஆழமாக பேசப்பட வேண்டிய விடயங்கள் என்பது ஒரு புறம் இருக்க இலங்கையின் வடக்கு, கிழக்கு மக்களை பிரதிநிதித்துவம் செய்கின்ற 6 தலைவர்கள் வந்திருக்கின்றோம் என்ற பீடிகையுடன் சென்றிருக்கின்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் வெளிப்படுத்திய விடயங்கள் தொடர்பாக எமது மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டி இருக்கின்றது.

அண்மையில், தமிழக முதலமைச்சரை சந்தித்த பின்னர் ஊடங்களுக்கு கருத்து தெரிவித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அணியினர், தமிழக கடற்றொழிலாளர்களுக்கும், இலங்கையின் வடக்கு தமிழ் கடற்றொழிலாளர்களுக்கும் இடையில் பாரிய பிரச்சினை இருப்பதாகவும் அதில் தமிழக முதலமைச்சர் தலையிட்டு சுமூகமாக தீர்த்து வைக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

ஆனால், இரண்டு தரப்பு கடற்றொழிலாளர்களுக்கும் இடையில் பரஸ்பர முரண்பாடு இல்லை. இந்தியக் கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்டவிரோத செயற்பாடுகளே பிரச்சினைக்கு மூல காரணமாக இருக்கின்ற நிலையில், உண்மைகளை எடுத்துக்கூறி, எமது கடற்றொழிலாளர் எதிர்கொள்ளும் வாழ்வாதார பிரச்சினையை தீர்க்க வேண்டியதன் அவசியத்தை தமிழக தலைவர்களிடம் வலியுறுத்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி தவறியுள்ளனர்.

உள்நோக்கம்

அத்துடன், பிரச்சினையின் தீவிரத்தையும் திட்டமிட்டு மறைத்து , திசைதிருப்பி இருக்கின்றனர் என்று குற்றஞ்சாட்டினார்.

அதேபோன்று, தனிநாட்டினை உருவாக்குவதே இறுதி இலக்கு என்று தமிழக முதல்வரிடம் தமிழ் தேசிய மக்கள் எடுத்துரைத்துள்ளமை விடுதலை சிறுத்தைகளின் தலைவர் திருமாளவன் மூலம் வெளிப்படுத்தப்பட்டமையை சுட்டிக் காட்டியுள்ள ஈ.பி.டி.பி. ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந், இதன் உள்நோக்கம் தொடர்பாக குறித்த கட்சியினர் மக்களுக்கு தெளிபடுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமிழக முதலமைச்சரிடம் தெரிவித்துள்ள விடயத்தின் உள்நோக்கம்! ஈ.பி.டி.பி. வலியுறுத்தியுள்ள விடயம் | Tnpf Meets Tamilnadu Chief Minister Epdp

மேலும், அதிகாரங்கள் கிடைத்தால் தனிநாட்டை உருவாக்கி விடுவார்கள் என்று 13 ஆம் திருத்தச் சட்டத்தை வழங்காமல் தவிர்ப்பதற்கே காரணம் சொல்லப்படும் நிலையில், நடைமுறை யதார்த்தம் பற்றிய சிந்தனையற்ற - முட்டாள்தமான இந்தக் கருத்து தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு முயற்சிகளுக்கு பாதிப்பினையே ஏற்படுத்தும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், தமிழகம் சென்றுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் வெளியிட்ட கருத்துக்களும் நிலைப்பாடுகளும் காலத்துக்கு காலம் தமிழ் மக்களை காட்டி கொடுத்து வருகின்ற பொன்னம்பலம் குடும்பத்தினரின் பரவணிப் பண்பியல்பின் தொடர்ச்சியாகவே பார்க்க வேண்டி இருப்பதாககவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈழத் தமிழர்களின் இருப்பையும் எதிர்காலத்தினையும் கேள்விக்கு உட்படுத்தும் இவ்வாறான செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும் எனவும் ஈ.பி.டி.பி. ஊடகச் செயலாளரினால் குறித்த ஊடகச் சந்திப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த இந்திய துணைத்தூதுவர்! வழங்கப்பட்டுள்ள உலருணவு பொருட்கள்

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த இந்திய துணைத்தூதுவர்! வழங்கப்பட்டுள்ள உலருணவு பொருட்கள்

மட்டக்களப்பில் விபத்து! மேலதிக விசாரணையில் பொலிஸார்

மட்டக்களப்பில் விபத்து! மேலதிக விசாரணையில் பொலிஸார்

மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Kachcheri, மானிப்பாய், சென்னை, India, Brampton, Canada

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

19 Mar, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US