தமிழர்களின் ஒப்பந்தங்களை கிழித்தெறிந்த மகாநாயக்க தேரர்கள்! ஸ்ரீநேசன் விசனம் (Video)

13th amendment Sri Lanka Police Kandy Ranil Wickremesinghe Sri Lankan political crisis
By Dias Feb 03, 2023 03:54 PM GMT
Report

அன்று பண்டா - செல்வா ஒப்பந்தம் கிழித்தெறியப்படுவதற்கு காரணமான மகாநாயக்கர்களே இன்று மாகாண சபைகளுக்கான காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்கும் விடயத்திலும் தடையாக இருக்கின்றார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் விசனம் தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மகாநாயக்கர்களை சந்தித்த போது மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை வழங்கக் கூடாது என விடுக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில், இன்று மாலை (03.02.2023) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவிக்கையில்


மகாநாயக்க தேரர்களின் கோரிக்கை

சுதந்திரத்திற்கு முன்பாக இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வை தரப் போவதாகவும், அதன் ஒரு அம்சமாக 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த போவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டிருந்தார்.

நேற்று முன்தினம் ஜனாதிபதி மகாநாயக்க தேரர்களை சந்தித்த போது, 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த கூடாது என்றும் குறிப்பாக காணி, பொலிஸ் அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்கக் கூடாது என்றும் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

தமிழர்களின் ஒப்பந்தங்களை கிழித்தெறிந்த மகாநாயக்க தேரர்கள்! ஸ்ரீநேசன் விசனம் (Video) | Tna Srinesan Critisise About 13Th Amanment

இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து தொடர்ந்து, 75 ஆண்டுகளாக இனப்பிரச்சினைக்கான தீர்வுகளை எட்டுவதற்கான பல்வேறுபட்ட ஒப்பந்தங்கள், உடன்படிக்கைகள், பேச்சுவார்த்தைகள் என்பன முன்னெடுக்கப்பட்டாலும் அவை அனைத்தும் பேரினவாத சக்திகளினால் தடைப்படுத்தப்பட்டே வந்திருக்கின்றன.

அந்த வரிசையில் தற்போது 13ஆவது திருத்தத்தை கூட முழுமையாக நடைமுறைப்படுத்தக் கூடாது எனும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

தமிழர்களின் ஒப்பந்தங்களை கிழித்தெறிந்த மகாநாயக்க தேரர்கள்! ஸ்ரீநேசன் விசனம் (Video) | Tna Srinesan Critisise About 13Th Amanment

சர்வதேச பொறிமுறை

இலங்கை அரசாங்கத்தினால் தமிழர்களுக்கு தீர்வு கிட்டாது. உள்நாட்டு பொறிமுறைகள் மூலமாக இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்க்க முடியாது.

அதனால் சர்வதேச பொறிமுறை ஒன்று தான் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒரேவழி எனும் விடயம் மகாநாயக்கர்களின் இந்த கருத்தின் ஊடாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள்

1956 ஆம் ஆண்டில் பண்டா - செல்வா ஒப்பந்தம் கிழித்தெறியப்படுவதற்கும், தற்போது மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை வழங்கும் விடயத்திலும் இதே மகாநாயக்கர்கள் தான் தடையாக இருக்கின்றார்கள்.

தமிழர்களின் ஒப்பந்தங்களை கிழித்தெறிந்த மகாநாயக்க தேரர்கள்! ஸ்ரீநேசன் விசனம் (Video) | Tna Srinesan Critisise About 13Th Amanment

எனவே உள்நாட்டு பொறிமுறை என்பது ஏமாற்று வித்தையாகவே அமைந்துள்ளது.

இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு உரிய செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என இவ்வேளையில் கேட்டுக் கொள்கின்றேன் எனத் தெரிவித்துள்ளார்.


மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US