கோட்பாட்டை மீறிய ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி! கண்டனம் வெளியிட்டுள்ள தமிழரசுக்கட்சி
உள்ளூராட்சி சபைகள் தொடர்பான தமிழ்க் கட்சிகளின் தொடக்க காலக் கோட்பாட்டை முழுமையாக மீறியுள்ளதாக ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி தமிழரசுக்கட்சியின் பதில்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
இந்தவிடயம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்,
“உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர்கள் தெரிவில் எங்களுக்குள் வேறுபாடுகள் இருந்த போதிலும் தேசிய மக்கள் சக்தி வடக்கு கிழக்கில் உள்ள எந்தவொரு சபையிலும் ஆட்சி அமைப்பதற்கு இடமளிக்கக்கூடாது என்பதில் எல்லாத் தமிழ்க் கட்சிகளும் தொடக்கம் முதலே ஒரு இறுக்கமான கொள்கை கோட்பாடாகக் கடைபிடித்து வந்திருக்கின்றன.
மீறும் செயல்
இந்தக் கோட்பாட்டை தமிழ் அரசுக் கட்சி வடக்கு கிழக்கு முழுவதும் எந்தப் பிசிறுமின்றிப் பின்பற்றி வந்திருக்கின்றது. இதுநாள் வரையில் ஏனைய தமிழ்க் கட்சிகளும் கூட அதனைப் பின்பற்றி வந்திருந்தன.

ஆனால் இந்த அடிப்படைக் கோட்பாட்டுக்கு முரணாக ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி மன்னார் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து ஆட்சியமைத்திருக்கின்றனர்.
இது உள்ளூராட்சி சபைகள் தொடர்பான தமிழ்க் கட்சிகளின் தொடக்க காலக் கோட்பாட்டை முழுமையாக மீறும் செயல். ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் இந்த அணுகுமுறையை தமிழ் அரசுக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
தமிழ் மக்களின் அரசியல்
அவர்களின் இந்தச் செயல் உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்க் கட்சிகளுக்கு மக்கள் வழங்கிய ஆணைக்கு முற்றிலும் முரணானது.

'கொள்கைக்கூட்டு' என்று முழங்கியவர்கள் இப்போது அடிப்படைக் கோட்பாட்டையே தகர்த்து தேசிய மக்கள் சக்தியுடன் கைகோர்த்திருப்பது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைக் குழிதோண்டிப் புதைக்கும் செயல்” என குறிப்பிட்டுள்ளார்.
ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri
பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam