தமிழ் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்வதில் அவசரப்பட்டு தீர்மானம் எடுப்பதில்லை: சம்பந்தன்
தமிழ் தேசிய கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்வதில் அவசரப்பட்டு தீர்மானம் எடுப்பதில்லை என அதன் தலைவர் சம்பந்தனின் அறிவிப்பை உள்வாங்கி அச்செயற்பாட்டை உடனடியாக மேற்கொள்வதில்லை என இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது.
அத்துடன் வடக்கு, கிழக்கிலுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் ஆட்சியைக் கைப்பற்றுவதையும், கூட்டமைப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கமாகவும் கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள மூன்று பங்காளிக்கட்சிகளும் தனித்தனியாக உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் வேட்ட்புமனுக்களைச் சமர்ப்பித்து களமிறங்குவதற்கு மத்தியகுழு பெரும்பான்மையோர் ஆதரவு வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பிலான முழுமையான செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான பத்திரிகை கண்ணோட்டம்,
