சந்திரகாந்தனை விமர்சிக்க சாணக்கியனுக்கு உரிமை இல்லை! தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி
இளைஞர்களின் தியாகத்தால் உருவான தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியையும், அதன் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தனையும் விமர்சிப்பதற்கு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கு எந்த உரிமையும் கிடையாது என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் நேற்றைய தினம் விடுத்துள்ள அறிக்கையில் அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
போலி தேசியவாத அரசியல்
மேலும் தெரிவிக்கையில், வெறும் ஆசனங்களை சூடாக்குவதற்காகவோ சொந்த நலனுக்காக சொத்து சேர்ப்பதற்காகவோ இளைஞர்களை சூடாக்கி போலி தேசியவாத அரசியல் செய்வதற்காகவோ இந்த ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் சங்கமித்தவர்கள் அல்ல தமிழ் மக்கள் விடுதலை புலிகள்.

கிழக்கில் தமிழர்களின் இருப்பை நிலைப்படுத்தி கல்வி, கலை, கலாச்சார, பொருளாதார
மேம்பாட்டிற்காக எம்மக்கள் மாற்று அரசியல் தலைமைகளிடம் மண்டியிடாது தம்மை தாமே
ஆளாக்கூடிய கிழக்கு தலைமைகளை உருவாக்குவதற்காக பல நூற்றுக்கணக்கான இளைஞர்களின்
தியாகத்தின் பால் ஆயிரக்கணக்காக இளைஞர்களின் அர்ப்பணிப்புடன் பயணிக்கின்ற தமிழ்
மக்கள் விடுதலை புலிகளையும், கிழக்கு மக்களின் மீட்புக்காக தூரநோக்கு
சிந்தனையின்பால் மக்களின் பேராதரவையும் பெற்ற சிவநேசதுரை சந்திரகாந்தனையும் விமர்சிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் அநாகரிகமான செயற்பாடுகளை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.
குவைத்தின் உப்பு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை தாக்கிய ஈரான்., அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி News Lankasri
உலகக் கோப்பையில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல்: இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கம் News Lankasri