ஹட்டன் - நல்லதண்ணீர் வீதி புனரமைப்புப் பணி ஆரம்பம்
டித்வா அனர்த்தத்தால் கடுமையாக சேதமடைந்த ஹட்டன் - நல்லதண்ணி பிரதான வீதியை முழுமையாக புனரமைக்கும் பணிகள் இன்று(19.07.2026) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான மஞ்சுளி சுரவீர தலைமையில், மஸ்கெலியா மற்றும் நோர்வூட் பகுதிகளில் இந்தப் புனரமைப்புப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
87 மில்லியன் ரூபாய் நிதி
இந்தத் திட்டத்திற்காக சுமார் 87 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நிதியின் மூலம் டித்வா காரணமாக சேதமடைந்த மதகுகள், வீதியோரப் பாதுகாப்புக் கட்டமைப்புகள், பக்கச் சுவர்கள் மற்றும் பாதுகாப்புச் சுவர்கள் என்பன முன்னைய நிலையை விட உறுதியான மற்றும் தரமான முறையில் மீளமைக்கப்படவுள்ளன.
அத்துடன், ஹட்டன் - நல்லதண்ணி பிரதான வீதியில் சுமார் 16 கிலோமீட்டர் நீளத்திற்கு கார்பெட் வீதி அமைக்கும் பணிகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீதி புனரமைப்புப் பணி
இதன்போது உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுளி சுரவீர,
மக்களின் நீண்டகால கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் வகையில் இந்த அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

மேலும், இந்தப்பகுதி மக்களின் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்கும், பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது.
அத்துடன், மக்கள் எதிர்பார்த்திருந்த பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களையும் கட்டம் கட்டமாக நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் உறுதியுடன் செயல்பட்டு வருகிறது என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.




முதலமைச்சர் விஜய் முதல் மமிதா பைஜூ வரை.. ஜனநாயகன் திரைப்படத்தில் நடிக்க பிரபலங்கள் வாங்கிய சம்பளம் Cineulagam
ஐரோப்பாவை வாட்டும் வெப்பம்... குரோஷியாவின் கடலடி அருங்காட்சியகத்தில் குவியும் சுற்றுலாப் பயணிகள்! Manithan