டைட்டானிக்கின் முடிவை அன்றே கணித்த பயணி! ஐந்து நாட்களுக்கு முன்பு எழுதிய கடிதம்
டைட்டானிக் கப்பல் மூழ்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு பயணி ஒருவர் எழுதிய கடிதம் இங்கிலாந்தில் நடைபெற்ற ஏலம் ஒன்றில் £300,000 (சுமார் $400,000) என்ற சாதனை விலைக்கு விற்கப்பட்டுள்ளது.
2கர்னல் Archibald Gracie எழுதிய இந்த கடிதம், Wiltshire இல் உள்ள Henry Aldridge and Son ஏல இல்லத்தில் நேற்றையதினம்(28) ஒருவரால் வாங்கப்பட்டுள்ளது.
எதிர்பார்க்கப்பட்ட விலை
இதன் எதிர்பார்க்கப்பட்ட விலையான £60,000 ஐ விட ஐந்து மடங்கு அதிக விலைக்கு இது ஏலம் போயுள்ளது.
இந்த கடிதம் “தீர்க்கதரிசனமானது” என்று வர்ணிக்கப்படுகிறது. ஏனெனில், கர்னல் Gracie தனது நண்பர் ஒருவருக்கு எழுதியதில், “அந்த அழகான கப்பல்” குறித்து முழுமையாக தீர்ப்பளிப்பதற்கு முன் தனது “பயணத்தின் முடிவை” தான் எதிர்பார்த்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த கடிதம் 1912 ஏப்ரல் 10 ஆம் திகதியிடப்பட்டுள்ளது. அன்றுதான் அவர் சௌத்தாம்ப்டனில் டைட்டானிக் கப்பலில் ஏறியுள்ளார்.
மேலும், வட அட்லாண்டிக் கடலில் பனிப்பாறையில் மோதி கப்பல் மூழ்கும் ஐந்து நாட்களுக்கு முன்பு இது எழுதப்பட்டுள்ளது.
டைட்டானிக் கப்பல்
நியூயோர்க்கிற்கு சென்று கொண்டிருந்த டைட்டானிக் கப்பலில் இருந்த சுமார் 2,200 பயணிகள் மற்றும் பணியாளர்களில் கர்னல் Gracie-யும் ஒருவர். இந்த விபத்தில் 1,500 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
முதல் வகுப்பு பயணியான அவர், C51 அறையில் இருந்து இந்தக் கடிதத்தை எழுதியுள்ளார்.
1912 ஏப்ரல் 11 ஆம் திகதி கப்பல் அயர்லாந்தின் குயின்ஸ்டவுனில் நின்றபோது இது தபால் செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஏப்ரல் 12 ஆம் திகதி லண்டனில் தபால் முத்திரையும் பதிக்கப்பட்டுள்ளது. இந்த ஏலத்தை நடத்திய ஏல விற்பனையாளர், டைட்டானிக் கப்பலில் இருந்து எழுதப்பட்ட எந்த கடிதத்தையும் விட இதுவே அதிக விலைக்கு போனது என்று தெரிவித்துள்ளார்.
பேரழிவு
கர்னல் Gracie டைட்டானிக் மூழ்கியதைப் பற்றி எழுதியுள்ள கணக்கு மிகவும் பிரபலமான ஒன்றாகும். பின்னர் அவர் “The Truth About The Titanic” என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார். அதில் அந்த பேரழிவு கப்பலில் தனது அனுபவத்தை விவரித்துள்ளார்.
பனிப்பாறை நீரில் தலைகீழாக கவிழ்ந்த ஒரு உயிர்காக்கும் படகில் ஏறி உயிர் பிழைத்ததையும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
அந்த லைஃப் படகில் முதலில் ஏறியவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் சோர்வு அல்லது குளிரால் இறந்துவிட்டதாகவும் அவர் எழுதியுள்ளார்.
வரலாற்று முக்கியத்துவம்
கர்னல் Gracie இந்த விபத்தில் உயிர் பிழைத்தாலும், அவர் தாங்க முடியாத குளிர் மற்றும் உடல் காயங்களால் அவரது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
1912 டிசம்பர் 2 ஆம் திகதி அவர் கோமாவுக்குச் சென்று, இரண்டு நாட்களுக்குப் பிறகு நீரிழிவு நோயின் சிக்கல்களால் இறந்துள்ளார்.
டைட்டானிக் கப்பலின் சோகமான நினைவுகளை தாங்கி நிற்கும் இந்த கடிதம், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.