மொட்டுக் கட்சியிலிருந்து நீக்கப்படுவாரா திஸ்ஸகுட்டியாராச்சி! அவருக்கு எதிராக வலுக்கும் எதிர்ப்புக்கள்...
ஸ்ரீலங்கா மொட்டுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனக்க திஸ்ஸகுட்டியாராச்சியை உடனடியாக கட்சியிலிருந்து நீக்குமாறு கட்சிக்குள்ளிருந்தே நாமல் ராஜபக்சவிடம் பலர் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
குறிப்பாக திஸ்ஸகுட்டி ஆரச்சி ஐக்கிய மக்கள் சக்தியை குறிவைத்து மேற்கொள்ளும் தேவையற்ற கருத்துக்கள் மொட்டுக் கட்சிக்கு பாதகமானது மற்றும் தேவையற்ற செயற்பாடுகள் என கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் நாமல் ராஜபக்சவிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தேவையற்ற விமர்சனங்கள்
அத்தோடு அநுராதபுர மாவட்ட அமைப்பாளர் என்ற ரீதியில் திஸ்ஸகுட்டி ஆரச்சி வெளியிடும் கருத்துக்களுக்கு அநுராதபுர மாவட்ட கட்சி உறுப்பினர்களும் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வந்துள்ளனர்.
இதன் காரணமாக பலர் கட்சியை விட்டு வெளியேறியுள்ளதாகவும் அறியமுடிகிறது. இதற்கு முன்னரும் பல சந்தர்ப்பங்களில் திஸ்ஸகுட்டி ஆரச்சி பெண்களை இலக்கு வைத்து அவமதிக்கும் கருத்துக்களை வெளியிட்டமைக்காக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் அவருக்கு கடுமையாக எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

அதனால் தற்போது கட்சிக்கு தலைவலியாக மாறியுள்ள திஸ்ஸகுட்டி ஆரச்சியை மொட்டு கட்சியின் உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதற்கு அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.