புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம்: உலகளாவிய நிகொடின் மன்றத்தின் தகவல்
உலகளாவிய ரீதியில் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை குறைவடையும் வீதமானது ஆண்டுதோறும் 2 வீதத்திலிருந்து 5 வீதமாக அதிகரித்துள்ளதாக மருத்துவரும் அவுஸ்திரேலிய போதைப்பொருள் சட்ட சீர்திருத்த அறக்கட்டளையின் முன்னாள் தலைவருமான கலாநிதி மருத்துவர் அலெக்ஸ் வோடக் தெரிவித்துள்ளார்.
போலந்து நாட்டின் வார்சா நகரில் நடைபெற்ற நிகொடின் தொடர்பான 13 ஆவது வருடாந்த உலகளாவிய மன்றத்தில் (13th Annual Global Forum on Nicotine ) (GFN) உரையாற்றும் போதே மருத்துவர் இதனைக் குறிப்பிட்டார்.
உலகில் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை
உலகெங்கிலும் உள்ள 1 பில்லியனுக்கும் அதிகமான புகைப்பிடிப்பவர்களில் சுமார் 15வீதப் பகுதியினர் தற்போது புகைப்பிடித்தல் அல்லாத மாற்று தயாரிப்புகளுக்கு மாறியுள்ளனர்.
புகைப்பிடிப்பதற்கு அடிமையானவர்கள் அதிலிருந்து விடுபடுவதற்கான மாற்று வழிகள் வழங்கப்படும் போது அவர்கள் அதனைச் செய்கிறார்கள் என்றும் மருத்துவர் குறிப்பிட்டார்.

புகைப்பிடித்தலில் இருந்து விடுபடுவதற்கான மாற்று வழிகளுக்கு அரசாங்கங்கள் எவ்வளவு தூரம் ஆதரவளிக்கின்றன அல்லது தடையாக இருக்கின்றன என்பது உலகெங்கிலும் உள்ள பில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கை அல்லது மரணம் தொடர்பான ஒரு விடயமாகும்.
மேலும் புகைப்பிடித்தல் தொடர்பில் அரசாங்கங்களால் தடைகளை விதிப்பதும் சட்டங்களை இயற்றுவதும் சந்தையில் ஏற்படுத்தும் கட்டுப்பாடுகள் புகையிலை பயன்பாட்டினால் ஏற்படும் பாதிப்பைக் குறைப்பதற்கே என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.