யாழில் திருநெல்வேலி - பாற்பண்ணை கிராமம் முடக்கம்
யாழ். நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட திருநெல்வேலி மத்தி, வடக்கு பாற்பண்ணை கிராம அலுவலர் பிரிவு முற்றாக முடக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
திருநெல்வேலி சந்தையில் கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
இதனை அடுத்து மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் பாற்பண்ணை கிராமத்தில் 51 பேருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளமை நேற்றைய தினம் உறுதி செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்தே முடக்கல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இதனால் பாற்பண்ணை கிராமத்திற்கான போக்குவரத்து முடக்கப்பட்டு இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் வீதி தடை அமைத்து கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை இன்று முற்பகல் யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெறும் கூட்டத்தின் முடிவிலேயே தனிமைப்படுத்தல் தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளிவிடப்படும் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
