கந்தளாயில் மணல் ஏற்றச் சென்ற கனரக வாகனம் விபத்து! சாரதி காயம்
கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 20ஆம் பேரியல் பகுதியில் கனரக வாகனம் ஒன்று வீதியோரத்தில் இருந்த வேப்பமரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தானது இன்று(8.6.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மகாவலி ஆற்றுப் பகுதியில் மணல் ஏற்றிச் செல்லும் நோக்கில் ஹபரணை பகுதியிலிருந்து வந்த கனரக வாகனம், ஹபரணையிலிருந்து சூரியபுர நோக்கி சேருவில வீதியில் பயணித்துக் கொண்டிருந்தபோது 20ஆம் பேரியல் பகுதியில் சாரதி வேகக் கட்டுப்பாட்டை இழந்ததால் வீதியோரத்தில் இருந்த வேப்பமரத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை
இந்த விபத்தில் சாரதி காயமடைந்த நிலையில் கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் விபத்தினால் வாகனமும் பலத்த சேதமடைந்துள்ளது.

சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து சூரியபுர பொலிஸ் நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று மேலதிக விசாரணைகளை விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.