வவுனியாவில் வீதி புனரமைப்பு சீரின்மையால் புதையுண்ட டிப்பர்
வவுனியா - சாந்தசோலை இரண்டாம் குறுக்கு தெரு வீதி புனரமைப்பு சீரின்மையால் இன்று(06) பிற்பகல் டிப்பர் வாகனம் ஒன்று அதிகூடிய பாரம் காரணமாக வீதியில் புதையுண்டுள்ளது.
சாந்தசோலை இரண்டாம் குறுக்குத் தெரு தமிழ் தெற்கு பிரதேச சபையின் நிதியுதவியில் கடந்த வருடம் கிரவல் நிரவப்பட்டு பாதை புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது.
எனினும் அண்மையில் பெய்த மழை மற்றும் கனரக வாகனத்தின் கூடிய பாரம் காரணமாக வீதியில் அமைக்கப்பட்ட மதகுக்கு மேல் பயணித்த டிப்பர் ஒன்று தாழ் இறங்கியுள்ளது.
எனினும் இரண்டு மணிநேரத்தின் பின்னர் ஜே.சி.பியின் உதவியுடன் புதையுண்ட டிப்பர் வாகனம் மீட்கப்பட்டுள்ளது .
இதனால் அவ்வீதியுடனான போக்குவரத்து சற்று நேரம் தடைப்பட்டிருந்தது .
எனினும் கிரவல் நிரவிப் புனரமைப்பு சரியான முறையில் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் குறித்த வீதிகளில் மழையுடன் கிரவல் அள்ளுண்டு சென்றிருப்பதையும் காணமுடிந்துள்ளது .

நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri