தென்னிலங்கையில் வீட்டுக்குள் புகுந்த கும்பலால் தீ வைப்பு - உயிர் தப்பிய குடும்பத்தவர்கள்
களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போதியாவத்தை பகுதியிலுள்ள வீட்டிற்குள் நுழைந்த கும்பல் ஒன்று, நேற்று மாலை பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளது.
வீட்டிற்கு தீ வைக்கப்பட்ட போது, அதன் உரிமையாளர், அவரது தாயார் மற்றும் மற்றொரு நபர் ஆகியோர் வீட்டிற்குள் இருந்ததாக தெரியவந்துள்ளது.
இதன்போது அவர்களில் ஒருவருக்கு லேசான தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன.
வீட்டுக்கு தீ வைப்பு
சுமார் ஒரு கிலோகிராம் ஹெராயினுடன் மூன்று சந்தேக நபர்களைக் கைது செய்யுமாறு, சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு பொலிஸ் சிறப்பு அதிரடிப் படைக்குத் தகவல் அளித்த நபருடைய வீட்டிற்கே இவ்வாறு தீ வைக்கப்பட்டுள்ளது.

களுத்துறை தெற்கு பொலிஸ் உள்ளிட்ட பல்வேறு பொலிஸ் படைகள் இந்தச் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றன.
களுத்துறை மாநகர சபையை சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுப்படுத்தியுள்ளனர்.
விபத்தில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக களுத்துறை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ராகு-கேதுவுக்கு இடையில் 7 கிரகங்கள் : அரிதான கிரகச் சேர்க்கையால் சிக்கலில் சிக்கப்போகும் 3 ராசிகள்! Manithan