சர்வதேச அரசியல் செயற்பாட்டாளர்கள் விழிப்போடு செயல்பட வேண்டிய காலம் -அருட்தந்தை மா.சத்திவேல்

Election War United nation Gotapaya rajapaksa
By Independent Writer Sep 28, 2021 05:32 PM GMT
Independent Writer

Independent Writer

in சமூகம்
Report

தேசிய மற்றும் சர்வதேச அரசியல் செயற்பாட்டாளர்கள் மிக விழிப்போடு செயல்பட வேண்டிய காலமிது. இல்லையெனில் முள்ளிவாய்க்கால் பேரழிவை விடவும் பயங்கர அழிவை நாம் சந்திக்க வேண்டும் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் (Ma.Sathivel) தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று (28) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அண்மையில் ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்ளச் சென்றிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச புலம்பெயர் (டயஸ்போரா )சமூகத்தைத் தமிழர் பிரச்சினை தீர்வு காணப் பேச்சுவார்த்தைக்கு அழைத்து இருக்கிறார்.

இது குறுகிய அரசியல் நோக்கம் கொண்டதும், பிரச்சினைக்குத் தீர்வு காணப் பேச்சுவார்த்தை எனக் காலத்தை இழுத்தடிக்கும் மற்றும் சர்வதேச அழுத்தச் சக்திகளை அமைதி கொள்ளச் செய்வதுமான நரி செயலுமாகும்.

சிங்கள பேரினவாத தலைவர்கள் தமிழ் தலைவர்களோடு கடந்த காலத்தில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைகள் அனைத்தையும் கிழித்ததோடு, விடுதலை இயக்கங்களோடு நடாத்தப்பட்ட திம்பு பேச்சுவார்த்தையும் தோல்வி கண்டு, யுத்தம் திணிக்கப்பட்டு சர்வதேச மட்டத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் தமிழர்கள் ஏமாற்றப்பட்டது மட்டுமல்ல தமிழ் ஈழ விடுதலைப் புலிகளோடு செய்துகொண்ட இடைக்கால உடன்படிக்கை ஏற்பாடுகளும் நிறைவேறாததன் காரணமாகவே அவலங்களைச் சந்தித்தவர்கள், உயிர் பாதுகாப்பு தேடியவர்கள் நாட்டை விட்டுப் புலம்பெயரும் நிலை ஏற்பட்டது.

முள்ளிவாய்க்கால் அவலத்தின் பின்னர் சர்வதேச சமூகத்தைக் கொடுத்த 13 பிளஸ் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை அதுமட்டுமல்ல தற்போதைய ஜனாதிபதி நாட்டில் அரசியல் பிரச்சினை இல்லை, இருப்பது அபிவிருத்தி பிரச்சினை எனத் தேர்தல் மேடைகளில் கூறி தானே உண்மையான தேசப்பற்றாளனும் பௌத்தனுமாவேன் என அடையாளப்படுத்திய பின்னர் எந்த நம்பிக்கையில் புலம்பெயர் சமூகம் பேச்சு வார்த்தைக்கு வரும்.

தற்போதைய ஜனாதிபதியையும், ஆட்சியாளர்களையும் பதவிக்கு அமர்த்திய மக்களே வெறுப்படைந்து இருக்கின்ற நிலையிலும் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் நான் போட்டியிடுவேன். அடுத்த ஜனாதிபதி பதவிக் காலமும் எனக்கும் வேண்டும் என்றவர் அந்தத் தேர்தலைச் சந்திப்பதற்கான வியூகமாகவே பேச்சுவார்த்தை எனக் காலத்தை இழுத்தடிக்கவும், புலம்பெயர் சமூகத்துக்கு ஊடாக தாயக தமிழர்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும் அவர்களுடைய வாக்குகளை தாமதமாக்கவும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கின்றார்.

காணாமல் ஆக்கப்பட்டோர்க்கு மரண சான்றிதழ் எனச் சர்வதேசத்தின் முன்னாள் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தவர் யுத்த குற்றங்கள் மனிதக்குலம் அங்கீகரிக்காத குற்றங்களையும் ஏற்றுப் பகிரங்க மன்னிப்பு கேட்காத யுத்த குற்றவாளிகளின் அழைப்புக்களை ஏற்பது என்பது தற்கொலைக்கு ஒப்பாகும்.

தியாகி திலீபனின் ஐந்து அம்ச நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாது கொலை செய்தவர்கள், யுத்தம் முடிவுற்றது என்று அவர்களே அறிவித்துவிட்டுப் படை முகாம்களை அகற்றாது, மாவலி எல் வலயம் என புதிய குடியேற்றங்களை ஏற்படுத்த முனைவதோடு, தொல்பொருளியல் திணைக்களத்தோடு பேரினவாத பௌத்த துறவிகளைச் சுதந்திரமாகத் தமிழ்ப் பிரதேசங்களில் நடமாட இடமளித்து தமிழர்களின் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைக் கையகப்படுத்திக் கொண்டு புலம்பெயர்ந்துள்ள சமூகத்தைப் பேச்சு வார்த்தைக்கு அழைப்பது சர்வதேச சமூகத்தின் கண்களில் மண்ணை தூவுவதற்காகவே.

இதில் இன்னுமொரு அபாயமும் உள்ளது. புலம்பெயர்ந்து வாழும் சமூகத்தில் தனக்கு வேண்டியவர்களை அழைத்து சர்வதேச புவிசார் அரசியலை முன்னெடுக்கவும் பேச்சுவார்த்தை என்ற நாடகத்தை அரங்கேற்ற முனைவதாகவே தோன்றுகின்றது.

இதனூடாக தமிழர்களையும் தமிழ்த் தேசத்தையும் சிதைக்கவும் புதிய உத்தியாகவே இந்த அழைப்பு எனக்கூறலாம். தேசிய மற்றும் சர்வதேச அரசியல் செயற்பாட்டாளர்கள் மிக விழிப்போடு செயல்பட வேண்டிய காலமிது. இல்லையெனில் முள்ளிவாய்க்கால் பேரழிவை விடவும் பயங்கர அழிவை நாம் சந்திக்க வேண்டும்.

அந்த அழிவுக்குக் காரணமானவர்கள் என நாம் நம்முடைய சரித்திரத்தில் பயப்படுவோம். இத்தகைய அவல நிலையை நீக்கத் தாயகம் மீது தணியாத தாகம் கொண்ட அனைத்து சக்திகளும் தமிழ்த் தேசத்தையும் தேசியத்தையும் பாதுகாக்க ஒன்று சேர வேண்டும் அதுவே காலத்தின் கட்டாயமாகும். பச்சோந்திகளையும் அடையாளம் கண்டு சமூக நீக்கம் செய்வதும் காலக்கடனே எனத் தெரிவித்துள்ளார்.

நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, வள்ளிபுனம்

30 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

26 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, சிட்னி, Australia

28 Oct, 2015
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, வவுனிக்குளம், பருத்தித்துறை

26 Oct, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Edmonton, United Kingdom, England, United Kingdom

27 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், கொழும்பு, Birmingham, United Kingdom

26 Oct, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US