அரசாங்கத்திற்குள் ஏற்பட்டுள்ள குழப்பம்! மிக முக்கிய நபரை களமிறக்கும் அநுர தரப்பு
மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா எதிர்வரும் நாட்களில் தேசியப் பட்டியல் உறுப்பினராக நாடாளுமன்றத்திற்குள் பிரவேசிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
தேசிய மக்கள் சக்தி கட்சியின் ஊடாக தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக அவர் நாடாளுமன்றத்திற்குள் வருவதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆளும் கட்சிக்குள் நெருக்கடி
ஆளும் கட்சிக்குள் அடுத்து அடுத்து நிகழும் நெருக்கடியான நிலையை தவிர்க்கும் பொருட்டு டில்வினை நாடாளுமன்றத்திற்குள் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரியவருகின்றது.

இதன்படி, மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் மத்தியக் குழுக் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டதாகவும், டில்வினை தேசியப் பட்டியல் உறுப்பினராக நாடாளுமன்றத்திற்குள் கொண்டுவர பலர் கோரிக்கைகளை முன்வைத்திருந்ததாகவும் சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அதேசமயம், கல்வி மறுசீரமைப்புத் திட்டம் உள்ளிட்ட சில விடயங்களால் ஆளும் கட்சிக்குள் நெருக்கடியான நிலை இருப்பதாகவும், டில்வினின் வருகையின் ஊடாக இதனை நிவர்த்திக்க முடியும் எனவும் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டத்தில் அழுத்தம் கொடுக்கப்பட்டதாக தெரியவருகின்றது.