சீனாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ரில்வின் சில்வா
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அழைப்பின் பேரில், மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா உள்ளிட்ட ஒரு குழு சீனாவிற்கு விஜயம் செய்துள்ளது.
இதன்போது சீனாவின் ஜெஜியாங் மாகாண ஆளுநர் லியு ஜீயுடனான சந்திப்பு முதலில் இடம்பெற்றுள்ளது.
நீண்டகால நட்புறவு
இந்த சிறப்பு சந்திப்பின் போது, இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு, மக்கள் விடுதலை முன்னணிக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையிலான நட்புறவு குறித்து குறிப்பாக விவாதிக்கப்பட்டுள்ளது.

ஊழல் நிறைந்த ஆட்சியை மாற்றுவதற்காக ஜே.வி.பி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், நாட்டின் பொருளாதாரத்தை விரைவாக மேம்படுத்தும் திட்டத்துடன் முன்னேறி வருவதாக டில்வின் சில்வா சந்திப்பில் வலியுறுத்தியுள்ளார்.
இச்சந்திப்பில் இளைஞர் விவகார பிரதியமைச்சர் எரங்க குணசேகர, பிரதியமைச்சர் முனீர் முலஃபர், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எம்.ஜெகதீஸ்வரன், மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தீப்தி வாசலகே, கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தர்மப்பிரிய விஜேசிங்க மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

குணசேகரனை ஆட்டிப்படைக்க மாஸ் என்ட்ரி கொடுத்த புதிய நபர், யாரு பாருங்க... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
பிக் பாஸ் குரலுக்கு சொந்தக்காரர்.. வைல்டு கார்டு என்ட்ரி நடிகர் அமித் பார்கவ் பற்றி இது தெரியுமா Cineulagam