கட்டுநாயக்க விமான நிலையத்தில் தீவிர பாதுகாப்பு - குவிக்கப்பட்டுள்ள அதிரடி படையினர்
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், அதிரடி படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்ட குற்ற கும்பலுடன் தொடர்புடைய குற்றவாளிகள் இன்று நாட்டு அழைத்து வரவுள்ளனர்.
கெஹெல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சாலிந்த உள்ளிட்ட ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த ஐந்து பேர் இன்று இந்தோனேசியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரும் நிலையில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தீவிர பாதுகாப்பு
அதற்கமைய விமான நிலையத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பொலிஸார், அதிரடி படையினர் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கையில் பல்வேறு குற்றச்செயல்களுடன் குற்றவாளிகளாக நீதிமன்றதால் அறிவிக்கப்பட்ட ஐந்து பேர் நேற்று முன்தினம் இந்தோஷேியாவில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
அவர்களை ஏற்றி சிறப்பு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் இன்றிரவு 7.26இற்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கவுள்ளது.
இந்நிலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.



